பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைப்பள்ளி சூழ்நிலை 173 எழுத்தர் வேலையில் சேர்ந்து கொண்டான். அக்காலத்தில் இப்பதவி துறையூரில் கிடைத்தற்கரியதாக இருந்தது நான் துறையூரில் தலைமையாசிரியனாகப் பணியாற்றியபோது இவனையும் நடேசன் என்ற மற்றொரு எழுத்தரையும் (நாங்கள் படிக்கும் போது ஏழாவது வகுப்பில் பயின்றவர்) அடிக்கடிச் சந்தித்துப் பழகுவதுண்டு. கோட்டாத்துரில் படிக்கும் வரையில் சட்டையோ பனியனோ அணியும் பழக்கம் இல்லை. இடுப்பு வேட்டியும் ஒரு சிறு மேலாடையும்தான் உடுத்திக் கொண்டிருப்போம். நாளடைவில் ஒருசிறு பனியன் அணியும் பழக்கம் வந்தது. துறையூருக்கு வந்த பின்னர்தான் சட்டை, பனியன் அணியும் பழக்கம் ஏற்பட்டது. மூன்று சட்டைகளைவைத் திருந்தோம். நாங்களே சோப்புபோட்டுத் துவைத்துக் கொள்வோம். மடத்தின் மாடியில் இருந்த கொடிகளில் உலர்த்திக் கொள்வோம். லாண்டரியில் துணிகளைப் போடும் பழக்கம் துறையூரிலிருந்தவரை எங்களிடம் ஏற்படவில்லை. குமிழி-23 23. உயர்நிலைத் தொடக்கப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிச்சூழ்நிலை துறையூர் பெருநிலக் கிழவர் உயர்நிலைத் தொடக்கப் பள்ளி அக்காலத்தில் மிகச் சிறப்பாகவும் பெரும்புகழுடனும் திகழ்ந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அக்காலத்தில் திருச்சி மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகள் அதிகமாக இல்லை. முசிறி, இலால்குடி, அரியலூர், குளித்தலை இந்த நான்கு ஊர்களிலும் கழக உயர்நிலைப் பள்ளிகளும், உடையார் பாளையத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியும் இருந்தன. இந்த ஊர்கள் வட்டத் தலைநகர்கள், இப்பள்ளிகளும் மாவட்டக் கழக ஆட்சியின்கீழ் இருந்தன.