பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நினைவுக் குமிழிகள்-1 இவற்றைத் தவிர, மாவட்டத் தலைநகராகிய திருச்சியில் தேசிய உயர்நிலைப்பள்ளி, புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி, பொன்னய்யா உயர்நிலைப் பள்ளி, E.R. உயர்நிலைப் பள்ளி என்ற நான்கு உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன. இருப் பூர்தி திருச்சி, இலால்குடி, குளித்தலையில் உள்ள பள்ளிகளில் இரயில் போக்குவரத்து உள்ள ஊர்களிலிருந்து வரும் சிறுவர் கள் மட்டிலுமே படித்து வந்தனர்; கல்லூரிப் படிப்பிலும் இந்த ஊர்தி வசதியையே பயன்படுத்திக் கொண்டனர். பிற இடங்களில் உள்ள பள்ளிகளில் அந்தந்த ஊர்களிலுள்ள சிறுவர் களும், சுமார் மூன்று கல் தொலைவிலுள்ள ஊர்களிலுள்ள சிறுவர்களுமே உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெற்றனர். இதனால் துறையூரிலுள்ள பெருநிலக்கிழவர் உயர்நிலைத் தொடக்கப்பள்ளி ஒர் உயர்நிலைப் பள்ளிபோல் திகழ்ந்தது. துறையூர் சிறுவர்களும் அண்மையில் ஒரு கல், இரண்டு கல் தொலைவிலுள்ள ஊர்ச் சிறுவர்களும் எட்டாம் வகுப்புப் பட்டதாரிகள் ஆயினர். இரண்டு : இங்குப் பணியாற்றிய E.B. நாகரத்தினம் அய்யர் (தலைமையாசிரியர்), T.S. இராச கோபாலய்யர், A. இராமசாமி அய்யர், சுப்பிரமணிய அய்யர், பெருமாள் நாயுடு (உடற்பயிற்சி ஆசிரியர்) போன்ற ஆசிரியர் கள்.மிகுந்த பக்தியுடன் தம் கல்விப் பணியை ஆற்றினர். E.B. நாகரத்தினம் அய்யர் நல்ல பொன்னிறத் திருமேனி வாய்க்கப் பெற்றவர். சலவை செய்யப்பெற்ற வேட்டி யாலான பஞ்சகட்சம், மார்பு திறக்கப் பெறாத முழுகோட்டு, சலவை செய்யப் பெற்ற முல்லைப் பூப்போன்ற வெண்ணிற ஆடையாலான தலைப்பாகை, சரிகை அங்கவஸ்திரம் இவற்றை அணிந்து கொண்டுதான் பள்ளிக்கு வருவார்; நெற்றியிலுள்ள கோபிசந்தனம் இவர்தம் முகத்திற்குப் பொலிவூட்டும். இந்தப் புறத்தோற்றம் பள்ளி ஒழுங்கு முறைக்குப் பெருந்துணை புரிந்தது.