பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைப்பள்ளி சூழ்நிலை 175 T.S. இராசகோபாலய்யர். A. இராமசாமி அய்யர், சுப்பிரமணிய அய்யர் இவர்கள் பஞ்சகச்சத்துடனும் முழுக்கைச் சட்டையுடனும், அங்கவஸ்திரத்துடன்தான் பள்ளிக்கு வருவர். பெருமாள் நாயுடு மட்டிலும் தட்டாடை அரைக்கை சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து வருவார். காலையில் இவருக்கு இந்தத் தோற்றம். மாலையில் அரைக் காக்கி டிராயர், அதனுள் செருகிய நிலையிலுள்ள அரைக் கைச்சட்டை இவற்றுடன் காட்சியளிப்பார். உடற்பயிற்சிக் கேற்ற உடையல்லவா? ஆடுகளத்திலும் விழாக்சள், சிறப்புக் கூட்டங்கள் நடைபெறும்போதும் மாணாக்கர்களின் ஒழுங்கு முறையைக் கண்காணிப்பதில் இவருக்கு நிகர் இவரே என்று அக்காலத்தில் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றவர். பார்ப்பதற்கும், பேசுவதற்கும் முரட்டுத்தன்மையுள்ளவர் போல் காணப் பெற்றாலும் பழகுவதற்கு மிக உயர்ந்தவ ராகத் திகழ்ந்தார். மாணாக்கர்களின் அன்புக்குப் பாத்திர மாகவும் விளங்கினார். சுருங்கக் கூறினால், புறத்தோற்றத் தில் இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியை ஒத்துத் திகழ்ந்தது. பாடவேளைப்பட்டி (Time - table) நடைமுறையி லிருந்தது. பள்ளி முற்பகலிலும் பிற்பகலிலும் தொடங்கும் போது முதலில் இரண்டு நீண்ட மணியோசையும் அடுத்து இரண்டு சிறிய மணியோசையும் எழுப்பப் பெறும், ஒவ்வொரு பாடவேளையின் இறுதியிலும் பாட வேளை நிறைவு பெற்றதற்கறிகுறியாக மணியோசைகள் எழுப்பப் பெறும் மாணாக்கர்கள் அப்படியே அமர்ந்திருக்க ஆசிரியர்கள் மட்டிலும் வகுப்பு மாறிச் செல்வார்கள். E.B. நாகரத்தினம் அய்யர் ஆங்கிலமும் வரலாறும் கற்பித்தார்; இராச கோபாலய்யர் புவியியல் கற்பித்தார்; இராமசாமி அய்யர் தமிழும் கணக்கும் கற்பித்தார். ஒவியம் கற்பித்தல் பெருமாள் நாயுடுவின் பொறுப்பிலிருந்ததாக நினைவு. நாங்கள் சேர்ந்த ஒன்றிரண்டு திங்களில்