பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நினைவுக் குமிழிகள்-1 இளமையுடன் திகழ்ந்த E.B. நாகரத்தினமைய்யர் ஏதோ நோய்வாய்ப்பட்டு இறைவன் திருவடி நிழலை அடைந்தார். பள்ளிமுழுவதும்-ஆசிரியர்களும் மாணாக்கர்களும்-துக்கக் கடலில் ஆழ்ந்தது. ஊர் முழுவதும் இந்தத் துக்க அலை பரவியது. தலைமையாசிரியர் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்ததை எல்லோருமே உணர்ந்தனர். அவர்தம் மிடுக்கான நடை, எல்லாவற்றிலும் கண்டிப்பு, அதே சமயத் தில் அன்பு, நெகிழ்ந்த பார்வை, நல்ல மாணாக்ர்களைத் தட்டி கொடுக்கும் பாங்கு-இவை இன்றும் என் உள்ளத்தில் பசுமையாகவே உள்ளன . T. S. இராசகோபாலய்யர் தலைமையாசிரியராக உயர்த்தப் பெற்றார். அவர் ஆங்கிலம், புவியியல் கற்பிக்கும் பொறுப்பை ஏற்றார். யாரோ ஒரு புதிய ஆசிரியர்பட்டதாரி! ஆனால் பயிற்சி பெறாதவர்-நியமனம் பெற்று எங்கள் வகுப்பிற்கு வரலாறு கற்பித்தார். தட்டாடை, திறந்த கோட்டு அணிந்து, சற்றுக் கூன்முதுகுடன் தோற்றம் அளித்தார். குறைந்தது மூன்று திங்களே இவர் கற்பித்தமை யால், இந்தக் குறுகிய காலத்தில் இவரைப் பற்றிய பண்பு களை அதிகமாக நினைவு கூர இயலவில்லை. தலைமை யாசிரியர் பதவி ஏற்றதும் இராசகோபாலய்யரிடம் மார்பு திறவாத கோட்டு இவர் திருமேனியிலும், வெள்ளைத் தலைப்பாகை இவர் திருமுடியிலும் ஏறின. பொன்னிற மேனியும், நெறறியில் திருநீறும், சந்தனப் பொட்டும் இவருக்கு மேலும் பொலிவினை அளித்தன. எல்லா ஆசிரியர்கள் கற்பித்த தனிப்பண்பு முதலிய வற்றை இப்போது நினைவு கூர முடியவில்லை. இராமசாமி அய்யர் புன்முறுவலுடன் கற்பித்தமை இன்றும் நினைந்து பார்க்க முடிகின்றது. மாணாக்கர்கள் ஏதாவது சிறு குறும்பு, செய்தால். உட்காரப்பா, பிரகஸ்பதி’ என்று அடிக்கடி இவர் வாயில் பிறப்பது இன்றும் என் நினைவி ல் பசுமையாக