பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைப்பள்ளிச் சூழ்நிலை 177 உள்ளது. சிறுவர்களின் போக்கு அறிந்து, மனநிலையை நன்கு தெரிந்து வாழ்க்கையுடன் இணைத்து இலாப-நட்டம், வட்டி; முதலிய கணக்குகளை மிக அற்புதமாகக் கற்பித்ததை இன்றும் நினைந்து பார்க்க முடிகின்றது. இவர் தமிழ் கற்பித் ததை இன்றும் மானசீகமாகப் பார்க்கின்றேன். இவர் கற்பித்த திருவாசகப் பாடல்கள் இப்போது நினைவுக்கு வரு கின்றன. பாடநூலில் தோத்திரப் பகுதி என்ற பகுதியில் வருவன இவை. ஒரு பாடல்: மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரைஆர் கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே." A. இராமசாமி அய்யர் ஒரு பெரிய புலவர் அல்லர். சிறந்த பக்திமான். பாடலைப் பலமுறை உள்ளம் உருகப் பாடுவார். இவர் ஒர் இசைக் கலைஞருமல்லர். எனினும் சிறிதும் நான மின்றி அவருக்கே உரிய இயல்பான குரலில் பாடுவார். பிறகு மெய் அரும்பல்-உடல் புளகித்தல்; விதிர்விதிர்த்தல்-நடுங் குதல்; விரை-மணம்; விரைஆர் கழல்-மணம் நிறைந்த திருவடி, கழல் என்பது வீரர் சதங்கை, அதை அணிந்திருக்கும் திருவடி ஈண்டு குறிப்பிடப் பெறுகின்றது. என்று சொற் பொருள் கூறுவார். வெதும்புதல்-இளஞ்சூடு ஆதல்; சயசய - ஜயஜய; வெற்றிக்குமேல் வெற்றி: கை - ஒழுக்கம்: நெகிழ விடேன் - தளரவிடேன்-இவ்வாறு சொற் பொருள் 5. திருவா. திருச்சத. 1 —12–