பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நினைவுக் குமிழிகள்-1 களை விளக்குவார்; இவற்றைக் கரும்பலகையிலும்எழுதுவார் -நாங்கள் குறிப்பேடுகளில் குறித்துக் கொள்வதற்கு, பிறகு பொழிப்புரைபோல் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்துவார்: "நறுமணம் நிறைந்த நின் திருவடியை நாடுகின்ற எனக்கு உடல் புளகாங்கித மடைகின்றது: உணர்ச்சியின் வேகத்தால் அது நடுநடுங்குகின்றது. என்கைகள் இரண்டையும் தலையில் வைத்து உன்னை வணங்குகின்றேன். கண்ணிர் பொங்கிவருகின்றது. உள்ளத்தில் இளஞ்சூடு தட்டு கின்றது. அந்த உள்ளத்தை உனக்கே கோயில் ஆக்கியதால் நிலையற்ற உலக வியவகாரங்கள் எல்லாம் அதை விட்டுப் பறந்தோடுகின்றன. நாவால் உன்னைப் போற்றுகின்றேன். "உனது திருவருள் விலாசத்துக்கு மேலும் மேலும், வெற்றி யுண்டாகுக என்று வாழ்த்துகின்றேன். ஈசனே, உன்னை நாடியிருப்பதே சன்மார்க்கமாகின்றது. அந்தச் சன்மார்க்கத் தினின்றும் நான் ஒரு பொழுதும் வழுவேன். நான் உடைமை, நீ என்னை உடையவன். மேலும் நீ எல்லாம் அறிந்தவன், அதாவது ஒதாது முற்றும் உணர்ந்தவன். ஆதலால் நான் எவ்வளவு தூரம் பண் பட்டு இருக்கின்றேன் என்பதை நீயே நன்கு அறிவாய். உனது திருவுளத்துக்கு ஒத்து ஒழுகுவது நான் கடைப்பிடிக்கும் நல்லொழுக்க மாகும். இதன்பிறகு பாடலை அவர் உள்ளம் நிறைவு பெறும் வரை ஒரிருமுறை பாடி மகிழ்வார். இதனால் எங்கள் உள்ளமும் நிறைவுபெறும்; மகிழ்வடையும், மற்றொரு பாடல் : இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்துஎன் என்புருக்கி கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன் கழல்இணைகள்