பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நிலைப்பள்ளிச் சூழ்நிலைகள் 179 ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகள்எல்லாம் பெருங்குதிரை ஆக்கிய ஆறு அன்றே உன் பேர்அருளே." இந்தப் பாடலையும் உள்ளம் உருகப் பாடுவார். 'இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து என் என் புருக்கி" என்ற அடிகளைப் பாடும்போது தன்னை மறந்த நிலையில் பாடுவார். மனம் இரும்பாக உருவகப் படுத்தியிருப்பதை எடுத்துக் காட்டுவார். நல்லவேளை மனதைக் கல்லாகச் செய்யாமல் இரும்பாகச் செய்தானே என்று கூறி மெய் மறந்து நிற்பார். சிவபெருமானாகிய காந்தம் மனம் கல்லாக இருந்தால் எப்படி ஈர்க்க முடியும்? என்று பாநயத்தையும் புலப்படுத்துவதுடன் கருத்து நயத்தையும் விளக்குவார்-கழலிணைகள் கரும்பிற்கு உருவகமாக அமைந் திருக்கும் நயத்தை எடுத்துக் காட்டுவார். இரும்பு மனத் திற்கு கரும்பின் சுவையைக் காட்டிய அற்புதத்தை விளக்கு வார். ஒருங்குதிரை உலவு சடை' என்ற தொடரை விளக்கும்போது சிவபெருமான் தலையில் கங்கா தேவி உலவுகின்றதாக இருப்பதைப் புலப்படுத்துவார். மதுரையில் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கின கதையை விரிவாகக் கூறி எங்கள் மனத்தைக் கதையில் ஈர்ப்பார் வகுப்பில் சிதறி இருக்கும் மனங்களையும் ஈ ர் த் து ப் பாடத்தின்மீது கவனத்தைத் திருப்புவார். தானே சுவைக்குன்றாக மாறி விடுவதால், சுவை அருவி எங்கள் மனத்தில் வந்து பாயும்; வெள்ளம் இடும். இப்படியாக அவர் கற்பித்ததை இன்றும் நினைவு கூர முடிகின்றது. துறையூர் மேட்டுத் தெருவில் இவர் குடியிருந்த அந்தக் காலத்தில் அடிக்கடி நான் இவரைப் பார்ப்பதுண்டு. 'வா, சுப்பு” என்று உள்ளங் குளிர அழைத்து உரையாடுவார். 4. திருவா. திருஏசறவு -1.