பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்பழக்கங்கள் படிதல் 18! துறையூருக்கு வ ரு ம் வ ைர ஊற்றுப்பேனாவைப் (Fountain pen) பயன்படுத்தும் முறையை நான் மேற் கொள்ளவில்லை. இங்கு வந்த பிறகுதான் (1930)இப் பழக்கம் என்னிடம் ஏற்பட்டது. நாலணாவுக்குக் கிடைக்கும் மையூற்றுப் பேனா. இதை ஜப்பான் சரக்கு’ என்று சொல்வார்கள். இதன் முள் கண்ணாடியாலானது. உருண்டை வடிவமாக உள்ள முள்ளின் எல்லாப் பக்கங்களிலும் வாரி' போன்ற பள்ளங்கள் இருக்கும். இவற்றின் வழியாக மை கசிந்து பேனாவின் முனைக்கு வரும். முள் (Nib) பழுதடைந்து விட்டால், மூன்று பைசாவுக்குக் (அப்போது அரையனாஆறு காசு) கிடைக்கும். கடையில் வாங்கிப் போட்டுக் கொள்ளலாம். அக்காலத்தில் இத் த ைக ய முள்கள் கோவிந்தராவ் புத்தகக் கடை, வேங்கடசுப்பையா செட்டியார் மளிகைக் கடை இவ்விடங்களில் கிடைக்கும். இப்போது அந்தக் கடைகள் இல்லை; மறைந்து விட்டன, இந்தப் பேனாவுக்கு அப்போது கிடைக்கும் ஸ்வான் இங்கி’ என்ற மையைத்தான் பயன்படுத்துவோம். இரண்டு அவுன்சு போத்தல் விலை மூன்றணா; எல்லோரும் போத்தலாக வாங்குவதில்லை. முதலில் வாங்கிய போத்தலிலுள்ள மை தீர்ந்ததும் அவுன்சு ஓரணாவுக்குக் கிடைக்கும். இதே மையை வாங்கிப் போத்தலில் நிரப்பிக் கொள்வோம். (Blue-Black) என்ற ஒரே ஒரு ரகம் மைதான் கடையில் விற்கப் பெற்றது. சிவப்பு மையும் கிடைக்கும். அதையும் வாங்கி அதற்கெனத் தனியாக வைத்திருக்கும் மற்றொரு ஊற்றுப் பேனாவில் நிரப்பிக் கொள்வோம். புவியியல், வரலாறு இப்பாடங் களில் படங்கள் வரையுங்கால் அவற்றின் ஊர்ப் பெயர்கள் முதலியவற்றைக் குறிப்பிடவும், மாகாணங்கள் பிரிவுகளைப் பிரித்துக் காட்டவும் இந்தச் சிவப்புமைப் பேனா பயன்படும். கோட்டாத்துாரில் இருக்கும் வரை தேர்வு முறை" என்ற ஒன்றைக் கண்டதே இல்லை. பள்ளியில் மையால் எழுதும்