பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நினைவுர் குமிழிகள்-1 வேலையே இல்லை. வீட்டில் எழுதும்போது ரிலீப்" முள்ளைக் கொண்டு தொட்டு எழுதும் பழக்கத்தைத்தான் மேற்கொண்டிருந்தோம். சில்லறைக் கடைகளில் சிறிய மைக்கட்டி ஒரு காசுக்கும், பெரிய மைக்கட்டி மூன்று காசு மாகக் கிடைக்கும், சிவப்பு மைக்கட்டியின் விலை இருமடங் காக இருந்தது. இவற்றைத் தனித்தனி மைக்கூட்டில் கரைத்துக் கொள்வோம். மூன்று காசு என்பது இப்போதுள்ள ஒன்றரைக் காசுக்குச் சமம். அதாவது ஒரு ரூபாய்க்கு 192 காசு, ஓரணாவுக்குப் பன்னிரண்டு காசு, ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா என்ற நாணய முறை அக்காலத்தில் நடை முறையிலிருந்தது. தேர்வு முறை வந்தபிறகு மைக்கூட்டை யும் தனிப்பேனாவையும் பள்ளிக்கு எடுத்துச் செல்வதைப் பெரும்பாலான மாணாக்கர்கள் விரும்பாததால் மையூற்றுப் பேனாவைப் பயன்படுத்தும் முறை வழக்கத்திற்கு வந்தது. அப்பொழுதும் துறையூரிலிருந்த சில பெரியவர்கள் மை யூற்றுப் பேனாவைப் பயன்படுத்தினால் எழுத்து செடும் என்ற கொள்கையையுடையவர்களாக இருந்தமையால் அவர்கள் தங்கள் சிறுவர்கள் மையூற்றுப் பேனாவைப் பயன்படுத்து வதை அனுமதிப்பதில்லை. அதனால் சில சிறுவர்கள் தேர்வில் மைக்கூட்டையும் பேனாவையும் சுமந்து கொண்டு வந்து தேர்வு எழுதுவதைப் பார்த்திருக்கின்றேன். சில மாணாக்கர்கள் மைக்கூட்டைக் கவனமாகக் கையாளாததால் தங்கள் சட்டையிலும் வேட்டியிலும் மையைக் கொட்டிக் கொள்வதுண்டு; பேனாவைக் கவன மாக எடுத்துச் செல்லாததால் முள்ளின் முனை மழுங்கிப் போவதுண்டு. மையூற்றுப் பேனாவைப் பயன்படுத்துவோர் சட்டையிலும் மைக்கறை தென்படுவதுண்டு. எல்லாச் சிறுவர்கட்கும் மையூற்றுப் பேனாவைப் பயன்படுத்தும் முறை சரியாகப் புரிவதில்லை. சிலர் மரையைச் சரியாகத் திருகி மூடுவதில்லை. சில சமயம் மரை கெட்டு பேனா