பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்பழக்கங்கள் படிதல் 183 சரியாக மூடப்பெற முடியாது போவமுதுண்டு. இதனால் சட்டைப்பைகளில் வைக்கப்பெறும் பேனாவில் மையொழுக்கு ஏற்பட்டுக் கறையை விளைவிக்கும். எழுதும் போதும் விரல் களில் மைக்கறை படிந்து விடும். இந்த மட்டரகப் பேனா வாங்குவதற்கும் காசு கிடைப்பதில்லை. நாட்டுப்புறத்தி லிருந்து வந்த எங்கட்குக் காசு மிக அரிதான பொருளாகவே இருந்தது. அந்தக் காலத்தில் (1930) துறையூரில் படக்காட்சிகட்கு வசதி இல்லை. அருகிலுள்ள சிற்றுார்களைச் சேர்ந்த சில துடுக்கான இளைஞர்கள் (Minors) மட்டரகமான பெண் களுடன் சேர்ந்த சில நாடகக் கம்பெனியாரைக் கொண்டு கொட்டகைகள் எழுப்பி நாடகங்கள் போடுவதுண்டு. நாங்கள் அந்தப் பக்கமே போவதில்லை; அந்நாடகங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எங்கட்கு இல்லை; அக்கறையும் இல்லை. இதனால் எங்கட்கு இந்தத் துறையில் காசு செலவு இல்லை. ஆனால் நாங்கள் முசிறியில் படிக்கும் போது துறையூர் வழியாகத்தான் எங்களுரை அடைய வேண்டும். அப்போது நாடகம் போட்ட மைனர்கள்’ கடனாளியாகி விட்டனர் என்ற செய்தி எங்கட்குக் கிடைத்தது. இவ்வாறு கடனாளி ஆகிவிட்டதன் அறிகுறி அவர்கள் முகத்தில் தாடியும் தலைமுடியுமாகக் காட்சி அளிப்பதுதான். தங்கட்கு இனி நல்ல வழிகாட்ட வேண்டு மென்று திருப்பதிக்கோ பழநிக்கோ முடி வளர்த்தனர் போலும்! துறையூருக்கு வருவதற்கு முன்னர் தேர்வுபற்றிய அநுபவமே இல்லை. பள்ளி மாணாக்கர்கள் தேர்வுக் காய்ச்சலால் அல்லலுற்றதை அரையாண்டுத் தேர்வின் போதே கண்டு கொண்டேன். சனவரியிலிருந்தே (1931) படிப்படியாக என்னையும் அக்காய்ச்சல் பற்றத் தொடங்கியது. வரலாற்றுப் பாடநூல் முழுவதும்-உரை