பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F84 நினைவுக் குமிழிகள்-1 நடையாயிருந்த போதிலும்- எனக்கு மனப்பாடம். தமிழ்ப் பாடநூலில் உள்ள செய்யுட்பகுதி முழுவதும் நெட்டுரு போட்டு விட்டேன். தேர்வு எழுதும் முறை நன்றாகப் பிடிபடவில்லை. பொருத்தமானவற்றை எழுதுவதைவிட அதிகமாகவே எழுதி விட்டதாக நினைவு. அரையாண்டுத் தேர்விலேயே வரலாறு கற்பித்த ஆசிரியர் எனக்கு இதை எடுத்துக் காட்டி விட்டார். வெயில் காலமானதால் மாலையில் சுமார் அரைக்கல் தூரம் ஏரிக்கரை வழியாக நடந்து சென்று கரையோரத்தில் படிப்பதும், சில சமயம் தெப்பக்குளக் கைப்பிடிச் சுவர்மீது அமர்ந்து கொண்டு படிப்பதும், இன்னும் சில சமயம் சின்ன மடத்து மொட்டை மாடியிலிருந்து கொண்டு படிப்பதுமான வழக்கத்தை மேற்கொண்டிருந்தேன். துறையூரைத் தாயக மாகக் கொண்டு பள்ளியில் படித்த மாணாக்கர்கள் என்னைப் ‘புத்தகப் புழு’ (Book worm) என்று கூடப் பெயரிட்டு வழங்கியதாக நினைவு. வண்ணத்துப் பூச்சியின் வாழ்வில் நான்கு பருவங்களைச் சொல்வார்கள்: முட்டைப் பருவம், கம்பளிப்பூச்சிப் பருவம், கூட்டுப்புழுப் பருவம், பூச்சிப்பருவம் என்று. இவற்றுள் கோட்டாத்துளரில் வி. கே. அரங்கநாத அய்யரிடம் கற்ற காலத்தில் என் கல்வி வாழ்வின் முட்டைப் பருவம் தொடங்கியதாகக் கருதலாம். கல்வி கற்றல்பற்றிய ஏராளமாக கருத்துகளை மனத்தில் விதைத்தார். இக்கருத்து கள் எந்த வித ஒழுங்குமின்றி என் மனத்தில் படிந்திருந்தன. துறையூரில் பயின்ற காலத்தில் என் கல்வி வாழ்வில் கம்பளிப் பூச்சிப் பருவம் அமைந்ததாகக் கருதலாம். கம்பளிப் பூச்சிகள் ஏராளமாக இலைகளைத் தின்று வளர்வதைப் பார்த்திருக் கின்றோம். முருங்கை மரத்தில் இவை ஏறி விட்டால் சொல்ல வேண்டியதில்லை; மரத்தில் ஒர் இலையைக் கூட விட்டு வைப்பதில்லை. மிலார் தான் மீதி இருக்கும்; இலை கள் யாவும் கபளிகரம் ஆகிவிடும். இந்த மாதிரி ஒரு பூச்சி வாழ்க்கை என் கல்வி வாழ்வில் அமைந்ததை ஒப்பிட்டுப்