பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்பழக்கங்கள் படிதல் 185 பார்க்கலாம். பாடநூல்களைக் கபளிகரம் செய்ததன்றி, கிடைத்த நூல்கட்கெல்லாம் இதே கதிதான். வாய்க்குட் படிக்கும் பழக்கம் நன்றாக ஏற்பட்டு விட்டது. கோட்டாத் தூரிலிருந்த போது என் படிப்பில் ஒரு தேக்க நிலை ஏற்பட்ட காலத்தில் அவ்வூர்ப் பசனை மடத்திலிருந்த இராமாயணம், பாரதம், பக்த விஷயம் போன்ற பெரிய உரைநடை நூல்களைப் படித்தலால் ஏற்பட்ட வாய்க்குட் படித்தல் பழக்கம் துறையூர் வாழ்வில் நன்கு வேரூன்றியது. இப்பழக்கம் என் பிற்காலக் கல்லூரி வாழ்வில் பெருந்துணை புரிந்தது. பல்வேறு மட்டங்களின் என் ஆசிரிய வாழ்விலும், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் நீடித்து நின்ற இப்பழக்கம் என்னை வாழ்வித்து வருகின்றது. X Χ x துறையூர்ப் பள்ளியில் நடைபெற்ற அரசினர் நடத்திய தேர்வில்-எட்டாவது வகுப்பில்-பள்ளியில் இரண்டாவ தாகத் தேர்ச்சி அடைந்தேன். எஸ். சாம்பவமூர்த்தி என்பவன் முதலாவதாகத் தேர்ந்தான். ஆறாவது வகுப்பி லிருந்தே இப்பள்ளியில் சேர்ந்து படித்திருந்தால் இன்னும் அதிக முன்னேற்றம் அடைந்திருக்க முடியும். தேர்வு முறை கள் நன்கு பிடிபட்டிருக்கும். போட்டியுணர்வால் முன்னேற்றம் நன்கு அடைந்திருக்க முடியும். கோட்டாத் துாரில் வி.கே. அரங்கநாத அய்யர் நல்ல அடிப்படையை உண்டாக்கினாலும் அவர் கணக்கு, ஆங்கிலம் இரண்டை மட்டிலுமே கவனிக்க முடிந்தது. வரலாறு, புவியியல், அறிவியல், தமிழ்-இந்தப் பாடங்கள் துறையூருக்கு வந்த பிறகே நன்கு அறிமுகமாயின். 1930-இல் முசிறியில் சேராமல் துறையூரில் சேர்ந்தது ஒரு விதத்தில் நல்ல வாய்ப்பாகவே அமைந்து விட்டது. உயர்நிலைப் பள்ளி சூழ்நிலை துறையூரிலேயே அமைந்து விட்டது. 1931இல் முசிறியில் சேரும்போது நல்ல அடிப்படையுடன் சேர்ந்தது இறைவன் திருவருளால் ஏற்பட்ட வாய்ப்பாகவே கருதுகின்றேன்.