பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q04 நினைவுக் குமிழிகள்-1 கழகத்தில் பதினேழு ஆண்டுகட்கு மேல் பணியாற்றியபோது பி.ஏ., எம்.ஏ., எம்.ஃபில், பி.எச்.டி. மாணாக்கர்கட்குத் தமிழ் கற்பிக்கவும் ஆராய்ச்சிக்கு வழி காட்டவும் வாய்ப்புகள் நேரிட்டன. நீண்ட என் கல்வி வாழ்வில் ஒய்வு பெற்ற பிறகு உயர்நிலைப்பள்ளியில் எனக்குக் கற்பித்த முறைகளைப்பற்றி நினைவுகூரும்போது என் நீண்ட அநுபவமும் கலந்தே வெளிப்படுகின்றது. தவிர, நான் தமிழைத் தனியாகப் பயின்ற போது சில சமயம் சில நாட்கள் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் இவற்றில் பாடம் சொன்ன பெரும் பேராசிரியர் களும் நினைவிலிலிருந்து பேசுவதையும் உணர முடிகின்றது. ஆசிரியரே இன்றி குருபக்தியுடன் பயின்ற ஏகலைவனின் கதையும் சிந்தனையில் எழத்தான் செய்கின்றது. முதலாவதாக ஆரம்பகணிதம் இயற்கணிதம், வடிவ கணிதம் இவற்றைக் கற்பித்த கே. இராமசந்திர அய்யர் நினைவுக்கு வருகின்றார். இவர்தான் என் உள்ளத்தில் குறிக்கோள் ஆசிரியராக நிரந்தர இடத்தைப் பெறுகின்றார். கற்றலில் அக்கறையை உண்டாக்கல் கற்பிக்கும் முறையின் உயிர் நாடி என்பதை நன்கு அறிந்தவர் கே. இராமசந்திர அய்யர். "அக்கறை கற்றலின் ஈர்ப்பு விசை என்பதை நன்கு புரிந்து கொண்டு பணியாற்றியவர். சிறார்களின் வயதுக் கேற்றவாறு மன வளர்ச்சி இருக்குமென்றும் இதற் கேற்றவாறு அவர்களின் விருப்பமும் மாறக் கூடியதென்றும் உளவியல் அறிஞர் கூறுவதைத் தம் அநுபவத்தால் நன்கு தெளிந்தவர். ஹெர்பார்ட் என்ற அறிஞர் கூறிய மனத்தைத் தயாரித்தல், எடுத்துக் கூறல், ஒப்பிடல், பொதுவிதிகாணல், விதியைச் செயற்படுத்தல் என்ற ஐந்து படிகளையும் தம் அநுபவமாக்கிக் கொண்ட நல்லாசிரியர். ஹெர்பார்ட்டின் ஐந்து படிகளில் மனத்தைத் தயாரித்தலே மிகவும் முக்கியமானது. புதிதாகப் பயிலப்