பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 நினைவுக் குமிழிகள்-1 மறந்து அங்காடித் தெருவில் இருப்பது போன்ற சூழ்நிலைய உண்டாக்கி விடுவார். நாங்களே முதல் போட்டுக் கூட்டு வாணிகம் நடத்துவது போலவும், கந்து வட்டி கந்தசாமிக் கடையில் வட்டிக்குக் கடன் வாங்குவது போலவும் காஃபிப் பொடிக்கடையில் காஃபித் தூளில் சிக்கரித் துளைக் கலப்பது போலவும், மண்டியில் தேங்காய், சருக்கரை மூட்டை போன்ற சரக்குகள் வண்டியில் வந்து இறங்குவது போலவும் உணர்ச்சியை எழுப்பி விடுவார். கற்பிக்கும் செய்திகள் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்து விடுவதால் கணக்குப் பற்றிய விவரங்களைக் கரும்பலகையில் மணிமணியான எழுத்துகளால் பொறிக்கப்படும்போது கருத்துகள் மனத்தில் ஆழப்பதிந்து விடுகின்றன. ‘āmalopth 57tropib’ (Time and Distance) Grsio so orthu கணிதப் பாடப் பகுதியை மிகுந்த உற்சாகத்துடன் கற்பித்தமை இப்போது நினைவில் குமிழியிடுகின்றது. (1)900 அடி நீளமுள்ள சரக்கு இரயில் மணிக்கு 20 மைல் வேகத்தில் வருகின்றது; அதன் எதிர்த்திசையிலிருந்து 660 அடி நீள விரைவு இரயில் வண்டி மணிக்கு 40 மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றது. இரண்டு வண்டிகளும் ஒன்றை யொன்று கடந்து செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?(2) 800 அடி நீளமுள்ள பயணிகளை ஏற்றிக் கொண்டு மணிக்கு 30 மைல் வீதம் செல்லும் இரயில் வண்டியொன்று 2 நிமிடங்களில் இரயில் நிலைய மேடையைக் கடந்து சென்றால் மேடையிள் நீளம் என்ன? இம்மாதிரியான கணக்குகளைக் கற்பிக்கும்போது மாணாக்கர்கள் இரயில் வண்டிகள், இரயில் நிலையம், எதிர்த்திசையில் வரும் வண்டிகள், ஒரே திசையில் வெவ்வேறு வேகங்களில் செல்லும் வண்டிகள் இவற்றை மானசீகமாகப் பார்த்தல் வேண்டும். அக்காலத்தில் நாட்டுப்புறங்களிலிருந்து வரும் மாணாக்கர் கனில் பெரும்பாலோர் இரயிலைப் பார்க்காதவர்கள், நகர்ப் புறத்திலிருந்து வரும் மாணாக்கர்கள் இரயிலைப் பார்த்