பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர்கள் இருவர் 207 திருந்தபோதிலும், இத்தகைய கணக்குகளைச் செய்யும் போது மானசீகமாகப் பார்ப்பது அருமை: நேரில் பார்க்கும் போது ஒருவித தெளிவும் பெற வாய்ப்பு உண்டு. ஆகவே, மாணாக்கர்களிடம் அக்கறை தோன்றவும், கணக்கு போடு வதற்கு அவர்கள் மனத்தைத் தயாரிக்கவும். கே.இராமச் சந்திர அய்யர் தம் வகுப்பு மாணவர்களை முசிறியிலிருந்து படகுகளின் மூலம் குளித்தலைக்கு இட்டுச்செல்வார். காலை உணவு உண்டு, கையில் சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு சுமார் 10.00 மணிக்குப் புறப்படுவோம். குளித்தலை இரயில் நிலையத்தில் எதிர்த்திசையில் இரயில் வருவதைப் பார்ப்ப தற்கும்.ஒரே திசையில் வண்டிகள் வருவதைப்பார்ப்பதற்கும் வண்டிகள் நிலைய மேடையைத் தாண்டுவதை நேரில் காண் பதற்கும் பல மணி நேரம் தவம் கிடப்போம். வண்டிகள் வராத போது, வண்டிகள் மேடையைக் கடப்பதுபற்றி விளக்குவார் கணக்கு ஆசிரியர் இராமச்சந்திர அய்யர். நிலையத்தின் ஒருகோடியை இஞ்சின் தொட்டு, மறு கோடியை வண்டியின் கடைசிப்பெட்டி கடப்பதைத்தான் வண்டி மேடையைக் கடந்தது என்ற உண்மையை நிதர்சன மாக விளக்குவார். வண்டிக்காக காத்திருக்கும் நேரத்தில் கணக்குபற்றிய பல்வேறு குறிப்புகளைத் தந்து விளக்குவார். நாங்கள் படித்த வகுப்பின் அடுத்த பிரிவுக்குக் கணக்கு கற்பித்தவர் சந்தானம் அய்யங்கார் என்பவர். மிக அருமை யாக விளக்குவதாக அப் பிரிவு மாணாக்கர்கள் சொல்வதைக் கேட்டிருக்கின்றேன். ஏராளமான கணக்குகளைக் கரும் பலகையில் போட்டுக் காட்டுவதையும் வீட்டு வேலையாக அதிக எண்ணிக்கையில் போடுமாறு செய்வதையும் ஓராண்டில் 2 குயர் குறிப்பேடு நான்கிற்குமேல் ஆவதையும் சிறப்பாகப் பேசுவார்கள். ஆனால் கே. ஆர். வகுப்பு மாணாக்கர்கட்கு 2 குயர் குறிப்பேடு ஒன்று கூட முடிவ தில்லை. இவர் கருத்துகள் மனத்தில் ஆழப்பதிவதையே