பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்லாசிரியர்கள் இருவர் 217 T. K. இராமநாதபிள்ளை மாணாக்கர் உணவு விடுதி யிலேயே உணவு கொண்டிருந்தார். திருமணமாகாத மாணி ஆதலால் நாங்கள் எல்லாம் உணவு கொண்டு படிப்பில் ஆழ்ந்திருந்த சமயம் அவர் சற்றுத் தாமதமாக வந்து உணவு கொண்ட பிறகு என் அறைக்கு வந்தார்; என் அருகிலும் வந்தார், நான் அப்போது ஆங்கிலம் படித்துக் கொண் டிருந்தேன். ஆங்கில வாக்கியம் ஒன்றைக் கூறுபடுத்திக் காட்டுமாறு (analyse) வினவினார். தலைமைக் கிளவி யத்தைச் சரியாகச் சொன்னேன். சார்புக் கிளவியங்களில் ஒன்றைச் சொல்லும்போது தவறிழைத்தேன். கன்னத்தில் 'இளந்தட்டு இட்டார். நான் உடனே, "ஐயா, உங்களை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கவில்லையே. உணவு கொண்ட பிறகு உறைவிடத்திற்கு நேராக ஏகுங்கள்' என்று சொல்லிவிட்டேன்! அவரும் பெரிய ம னி த னா கி விட்டாயா'? என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார். எப்படியும் மாணாக்கர்கட்குச் சொல்லவேண்டும் என்ற அறிவுத்தினவு அவரிடம் உண்டு; நல்லெண்ணத்தால் எழும் தினவு அது. அதே சமயம் பொறுமையின்மையால் 'கைத் தினவும் எடுப்பதுண்டு. இதுவே அவரிடம் காணப்பெற்ற குறை. காலப்போக்கில் இக்குறை நீங்கியிருக்கும் எனக் கருதுகின்றேன். பொது அறிவியலைக் கற்பித்தவர் A. நாராயணசாமி அய்யர். ஒல்லியான திருமேனியை மூடிய மேலங்கி அணி செய்யும். பஞ்சகச்ச முறையில் வேட்டி இடுப்பில் திகழும். தலையில் முல்லைப் பூ நிறம் போன்ற வெண்ணிறத் தலைப் பாகை இடம் பெற்றிருக்கும். அந்தக் காலத்தில் பெரும் பாலான ஆசிரியர்களிடம் கிராப்புத் தலையைக் காண்டல் அரிது. சிலர் தலையில் சிகையும் சிலர் தலையில் குடுமியும் தான் இருந்தன. இவற்றுடன் மேலங்கி (Coat) அணிந்தால் விநோத ஆடைப் போட்டியில் (Fancy dress competition)