பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 நினைவுக் குமிழிகள்-1 அனுப்பி விட்டனர். என்னை வெளியேற அனுமதித்திருந் தால் இராமநாதப்பிள்ளைக்கு வேதியியல் கற்பிக்கும் வாய்ப்பே இராது போயிருக்கும்; எல்லோருமே வெளியேறி யிருப்பர். இளையரான இராமநாதப் பிள்ளைக்கு இருவரும் ஏதோ கடுமையான அறிவுரை வழங்கியிருப்பர் என எண்ணு கிறேன். அதிலிருந்து அவர் மேற்படிவ மாணாக்கர்களின் மீது கைவைப்பதையே நிறுத்திக் கொண்டு விட்டார். அநுபவம் இல்லாக் காரணத்தாலும், பொறுமையும் பரிவும் இல்லாமையாலும்,மாணாக்கர் மனநிலையை அறிந்து கற்பிக்கும் திறன் இல்லாமையாலும் சிறிது காலம் திறனின்றியே இருந்தார். மனத்தில் தாம் ஏற்றிக் கொண்டு வரும் பாடப் பளுவை எப்படியாவது மாணாக்கர் மனத்தில் திணித்துத் தம் பளுவைக் குறைத்துக் கொள்ள முயன்றாரே யன்றி மாணாக்கர் மனநிலையைச் சிறிது காலம் புரிந்து கொள்ளவே இல்லை. "புற உலகிலிருந்து பட்டறிவு மூலம் பெறும் கருத்துகளே கல்வி என்பது; இப்பட்டறிவைப் புலன் கள் வாயிலாகவே அடைய முடியுமாதலால், ஆசிரியர்கள் இவ்வறிவுப் பெருக்கத்தில் துணையாக இருக்க வேண்டும்’ என்ற பெஸ்டலாஸ்ஸியின் கொள்கையைக் கடைப்பிடிப்ப தாக நினைத்துக்கொண்டு புலப்பயிற்சியை அறைவது மூலம் தந்தார் போலும்! வாயின் மூலம் விளக்கி செவிப்புலம் மூலம் கருத்துகளை மனத்தில் ஏற்றுவதற்குப் பதிலாகத் தொடு புலன் மூலம் (Sense of touch) ஏற்ற}நினைத்தார் போலும்! மருத்துவர்கள் வாய்வழியாக மருந்துகளைச் செலுத்தினால் பலன் தருவதில் காலதாமதம் ஆகும் என்று கருதி ஊசியின் மூலம் உடலில் குத்திப் புகுத்தவில்லையா? இதனைப் பல இடங்களில் கண்டிருப்பார் அல்லது தாமே அநுபவித்தும் இருப்பார் அல்லவா? அடியாத மாடு படியாது’ என்ற பழமொழியை செயற்படுத்தி அதன் பொருளை நேரடியாகப் புரிந்து கொள்ள முயன்றார் போலும்!