பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர்கள் இருவர் 215 கிளிப்பிள்ளையானாரேயன்றி வேறுவிதமாக மாற்றிச் சொல்லும் திறமை இவரிடம் இல்லை என்பதை உணர்ந் தேன். ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற பத்தினித் தனத்தைக் கைவிட்டு இந்த இடத்தில் மட்டும் தமிழைக் கையாண்டிருந்தால் ஒருகால் விளங்கியிருக்குமோ என்று என் மனம் இப்போது எண்ணுகின்றது. ஆனால் விளக்குவதற் கேற்ற தமிழ்மொழியறிவு வேண்டுமே. உள்ளத்தில் உண்மை யொளி இருந்தால்தானே வாக்கினில் வரும்? என்ன செய்வது? அவர்தான் கிளிப்பிள்ளையாயிற்றே. மீண்டும் விளங்க வில்லையே! என்றேன். திரும்பவும் மேடையினின்றும் இறங்கி வந்து கன்னத்தில் கை வைக்க முயன்றார். “நிறுத்துங்கள்!' என்றேன். சற்றுத் துணிவும் பிறந்தது. 'அறை கொடுப்பது தான் உங்கள் விளக்கமா?” என்று துணிவாகக் கேட்டு விட்டேன். அன்றிலிருந்து கைவைப்பதையே நிறுத்தி விட்டார். "பெரிய மனுஷனாகி விட்டாயா?" என்று வினவி விட்டு மெளனமானார். இப்படித் தேவையற்றதற்கெல்லாம் அடியும் உதையும் வாங்கிக் கொண்டு வேதியியல் படிப்பதை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்று மாலையிலேயே தேம்பியழுத நிலையில் செல்லய்யா என்ற தலைமையாசிரியரையும் கே.ஆர். என்ற மாணாக்கர் விடுதி மேலாளரையும் (Warden) சந்தித்து வேதியியலிருந்து இயற்பியலுக்கு என்னை மாற்றி விடுமாறு வேண்டினேன். இனி என்னால் அடி தாங்க முடியாது’ என்று முறையிட்டேன். இருவரும் என் நிலை மைக்கு வருந்தினார்கள். இந்தச் சின்ன வயதில் அநுபவக் குறைவாக இருந்தவருக்கு விருப்பப்பாடப் பொறுப்பைத் தந்தது பிசகு என்று குறிப்பாகப் பேசிக்கொண்டது அப்போதே என் காதில் பட்டது; ஆனால் அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அறிவு எனக்கு அப்போது இல்லை. இனி இப்படி நிகழாது' என்று சொல்லி என்னை