பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நினைவுக் குமிழிகள்-1 உண்மைகளை மாணாக்கர் மனத்தில் திணிப்பதில் பேரூக்கம் கொண்டிருந்தார். கற்பிக்கும்போது பொறுமையும் பரிவும் இவரிடம் காணப்படுவதில்லை; மாறாகத் துடிப்பும் அவசரத் தன்மையும் தலைதுாக்கி நின்றன. சோதனைகளைக் காட்டி விளக்குவதில் சிறந்த வராகத் திகழ்ந்தாலும் ஏ ட் டு ப் படி ப் பா. க , வாய் பாடுகளாக விளங்குவதில் இவர் சிறந்தவராகத் திகழ வில்லை. இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. சார்லஸ்-பாயில் விதியை விளக்கும் ఇ 2டி என்ற வாய்பாட்டை இவருக்குச் சரியாக விளக்கத் தெரியவில்லை. இந்தச் சமன்பாடு ஏன் என்பது விளங்காமையால் என் ஆராய்ச்சி மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. வேதியியல் பாட வகுப்பில் அப்பாவு என்ற மாணாக்கனும் நானும்தான் தலை மாணாக்கர்களாக இருந்தோம். அப்பாவுக்கு விளங்கிற்றோ விளங்கவில்லையோ எ ன் ப து இறைவனுக்குத்தான் வெளிச்சம். எனக்கு விளங்கவில்லை என்பதற்கு நானே சான்று. விளங்கவில்லை என்று தெரிவித்தேன். வகுப்பில் ஆசிரியர் மேடை இருந்தது. அதன்மீது மேசையும் நாற்காலியும் போடப்பட்டிருந்தன. ஆசிரியர் பின் பக்கத்தில் சுவரிலேயே அமைந்த கரும்பலகை இருந்தது. இராமநாதபிள்ளை கரும்பலகையில் மேற்குறிப்பிட்ட வாய்பாட்டையே எழுதி ஏதோ விளக்கினார். அவருக்கு விளக்குவதற்குவேண்டிய ஆங்கில அறிவு இல்லையா, அல்லது அவர் விளக்கத்தைப் புரிந்து கொள்ளுவதற்கேற்ற ஆங்கில அறிவு என்னிடம் இல்லையா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். நான் 'விளங்கவில்லையே’ என்றேன். மேடையிலிருந்து இறங்கி வந்து கன்னங்கள் வீங்கும் அளவுக்கு மாறி மாறி அறைந்தார். மீண்டும் மேடையேறி அதே பாடத்தையே படித்தார். சொன் னதையே சொல்லும்