பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர்கள் இருவர் 213 பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளிவந்தவுடன் ஆசிரியராக அமர்ந்தவர். காதித் துணியாலான நீண்ட குழாய்ச் சட்டை யும் திறந்த மேலங்கியும் (Open coat) அணிந்திருப்பார். சில சமயம் கழுத்துப் பட்டைத் தொங்கலும் காணப்படுவதுண்டு. நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் திகழ்ந்ததாக நினைவு. ஆடையைப்பற்றி இவர் தனி அக்கறை கொள்வதில்லை. ஆகவே, மேல் நாட்டு ஆடையுடன் திகழும் இவர் தோற்றம் அவ்வளவாக எங்கள் மனத்தைக் கவர்வ தில்லை. எங்கிருந்தாலும் இவரது கீச்சுக் குரல் இவர் இருப்பை இனங்காட்டிவிடும். சுறுசுறுப்புடன் இயங்குபவர்; மாணாக்கர்கள்பால் பேரன்பு கொண்டு பெருநோக்குடன் கற்பித்த பெருமகனார். இவருடைய சீரிய முயற்சினாயில் தான் முசிறி உயர்நிலை பள்ளியில் வேதியியல் சி.பிரிவில் விருப்பப் பாடமாக அமைந்தது. நானும் வேறு நான்கைந்து மாணாக்கர்களும் இதை இரண்டாவது விருப்பப்பாடமாகத் தேர்ந்து எடுத்துக் கொண்டோம். இயன்றவரை எல்லா அறிவியல் உண்மைகளையும் சோதனைகள் மூலம் விளக்குவ தில் வல்லவர்; சோம்பலே இவரிடம் தலைக் காட்டுவ தில்லை. ஒருசமயம் உயிர்வளி (பிராணவாயு) தயாரிப்பதில் ஒரு விபத்துக்கு ஆளானார். பொட்டாசியம் குளோரேட்டும் கந்தாகமிலமும் கலந்து சூடாக்கும்போது உயிர்வளி வெளிப் படும். குளோரேட் உப்பு தூய்மையற்றதாக இருந்தமையால் (குளோரைட் உப்பும் சிறிது கலந்திருந்தமையால்) குடுவை (Flask) வெடித்து இவர் முகத்தில் அமிலம் சிதறி விபத்துக் குள்ளானார். இறையருளால் கண்கெடவில்லை; முகத்தில் தான் சிறிது விகாரத்தை ஏற்படுத்தி விட்டது. எப்படியும் மாணாக்கரிடம் அறிவியல் உண்மைகளைப் புகுத்திவிட வேண்டும் என்ற துடிப்புதான் இவரிடம் விஞ்சி நிற்கும் பண்பாகத் திகழ்ந்தது. மாணாக்கர்களின் மனநிலையை மறந்து பாடப்பொருளே இவர் மனதில் மீதுார்ந்து நின்றது. மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றடிப்பது போல வேதியியல்