பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர்கள் இருவர் 219 லால் தமிழ் அரிதாகவே இவர் நாவில் தாண்டவமாடியது. எனினும் தமிழன்னையை பக்தியுடன் அணுகினமையால் நாளடைவில் அன்னையின் அருள் சுரந்தது. இரண்டரை ஆண்டுக் காலம் இவரிடம் பொது அறிவியல் கற்றதனால் இவர் தமிழில் க ற் பி த் த முறையில் பெருமாற்றம் கண்டேன். தமிழில் கற்பிக்க முயன்றால் காலப்போக்கில் அனைத்தும் சீர்படும் என்ற உண்மைக்கு வின்சென்ட் அவர் கள் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்கள். இக்காலத்தில் நாராயணசாமி அய்யர் பொது அறிவியல் நூலொன்றை நான்காம் படிவ மாணாக்கர்கட்கு வெளியிட்டார். இது எல்லோரும் வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது. வின்சென்ட் அற்புதமாகக் கற்பித்து குறிப்புகள் தந்தபிறகு இந்த நூலை யாரும் விரும்பவில்லை. முதலாவ தாக நூல் கவர்ச்சியான முறையில் அச்சிடப்பெறவில்லை: நூலின் தமிழ் நடை நன்றாக, ஆற்றொழுக்காக அமைய வில்லை; மேடுபள்ளங்களுள்ள சரளைச் சாலையில் நடப்பது போன்ற அநுபவத்தைத் தந்தது. இதைப் படிக்கும்போது நூலிலுள்ள கருத்துகள் என் மனத்தில் பதியவில்லை யாதலால் நூல் நன்றாக இல்லை என்று சொல்லி விட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை ஒளிவு மறைவு" இல்லாத பேச்சுப் பழக்கமுள்ளவன்; இந்த வெள்ளை மனத்தைச் சிலர் விரும்புவதில்லை. இதனால் எனக்குப் பல சமயம் தொல்லைகளும் ஏற்பட்டன. பலர் இக்குறையைப் (இன்னும் இது குறையென்று நான் ஒப்புக் கொள்வதில்லை) போக்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தினர். இஃது உலகி யலுக்கு ஒவ்வாத பழக்கமாக இருக்கலாம். என் தூய்மை யான உள்ளம் இதை மாற்றிக் கொள்ள மறுக்கின்றது. என் செய்வேன்? 'டிறங்கூறுதல்’ என்ற பண்பு சிறார்களிடமிருந்து வளர்ந்தவர்கள், கிழவர்கள்வரை ஆணவமலம்போல்