பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நினைவுக் குமிழிகள்-1 பிறவிப் பண்பாகத் திகழ்வதைக் காணலாம். இப்பண்பையே மூலதனமாகக் கொண்டு பதவிஉயர்வு, வேறுபல சலுகைகள் போன்றவற்றைப் பலர் பெற்று வயிறு வளர்ப்பதைக்' காணலாம். இவர்கள் சமூகத்தின் நஞ்சாகத் திகழ்பவர்கள் சமூகம் இவர்களை என்று புறக்கணிக்குமோ தெரியவில்லை. ஆணவமலம் அகற்ற முடியாத நிலையிலிருப்பதைப்போல் இதுவும் சிலரிடம் அகற்றமுடியாத பண்பாகத் திகழ்கின்றது. "நூல் நன்றாக இல்லை என்று நான் சொன்னதை எப்படியோ திரித்து யாரோ நாராயணசாமி அய்யரிடம் 'வத்தி வைத்து விட்டனர். நாராயணசாமி அய்யர் இதனால் அதிர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம் என்னைப் பள்ளித் தாழ்வாரத்தில் சந்தித்தபோது, தம்பி சுப்பு, உனக்கு ஒழியும்போது என்னை என் அறையில் வந்து பார்' என்று அன்பாகத்தான் சொன்னார். இயல்பாகவே பயந்த சுபாவமுடையவனாதலால் பயந்து நடுங்கிப் போனேன். மிக நடுங்கிய நிலையில் அவரை அறையில் சந்தித்தேன். அப்பா உன் பெயர் என்ன? நீ எந்த ஊர்? உன் தாய் தந்தை யாவர்?’ என்றெல்லாம் வினாக்களை விடுத்தார். நான் இவற்றிற்கெல்லாம் பதில் சொன்னேன். நான் வகுப்பில் முதல் மாணாக்கனாக இருந்தமையாலும் கே. ஆர். தலைமையாசிரியர், இராமநாதப்பிள்ளை இவர்கள் அன்புக்குப் பாத்திரனாக இருந்தமையாலும் நூல் நன்றாக இல்லை என்ற என் கருத்து நூலின் புகழுக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினார் போலும். அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் 'தம்பி போய் வா. ஒன்றுமில்லை. சும்மாதான் கூப்பிட்டேன். நன்றாகப்படி” என்று அறிவுரை கூறி அனுப்பி விட்டார். இந்நிகழ்ச்சி இன்றும் பசுமையாக என் மனத்தில் உள்ளது.