பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-28 28. நல்லாசிரியர்கள்-வேறு நால்வர் மாணாக்கர்கட்குப் பாடம் சொல்வதைப் பற்றி நச்சினார்க்கினியர் பண்டையோர் வழி வழியாக மாத்திரை போல் தந்த நூற்பாவைக் காட்டுவார். ஈதல் இயல்பே இயல்புறக் கிளப்பின் பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப் பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன் புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஒரையில் திகழ்ந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக் கொள்வோன் உணர்வகை அறிந்தவன் கொள்வரக் கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்.' ஆசிரியர் பொழிப்பு, அகலம், நுட்பம், எச்சம் என்ற வகை யில் எதனைக் கையாண்டாலும் கொள்வோன் உணர்வகை அறிந்து அவன் கொள்வரக் கொடுத்தல் தான் சிறந்த முறையாகும். உணர்வகை அறிதல் தான் கீழ்வகுப்பு களிலும் மேற்படிவங்களிலும் கற்பிக்கும் ஆசிரியர் கவனிக்க வேண்டிய குறிப்பாகும். இக்குறிப்பைத் தெளிவாக அறிந்து கற்பிப்பவர்களே நல்லாசிரியர்களாவர். நன்னூலாசிரியரும் பாடம் சொல்லுவதைப் பற்றி, ஈதல் இயல்பே இயம்பும் காலைக் காலமும் இடனும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப." 11. தொல்காப்பியச் சிறப்புப்பாயிர உரையில் காட்டப் பெற்றுள்ள மேற்கோள் நூற்பா. 12. நன். நூற். 36.