பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நினைவுக் குமிழிகள்-1 என்று நூற்பா இட்டுக் காட்டுவர். ஈதல் இயல்பு' என்பது பயிற்று முறையைக் குறிப்பிடும் சொற்றொடர். காலமும் இடமும் என்பதைத்தான் இக்காலத்தார் "தகுந்த சூழ்நிலை’ (Proper environment) argår gj Gossy suff. ‘a-GorāsūLGub பொருள் உள்ளத்தமைத்தல்’ என்பது பாட ஆயத்தத்தைக் (Lesson planning) குறிக்கும். கொள்வோன் கொள்வகை அறிந்து என்பது ஹெர்பார்ட் கூறும் மனத்தைத் தயாரித்தல்' (Preparation) என்ற படியில் அடங்குவதாகக் கொள்ளலாம். இவற்றை நன்கு அறிந்த அநுபவமிக்க ஆசிரியர்களிடம் பயிலும் பேறும் எனக்குக் கிட்டியிருந்தது. இவர்கள்தாம் என் கல்வி வாழ்க்கையில் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். முன் குமிழியில் கே. ஆர்., டி. கே. ஆர் ஆகிய இருவரைக் குறிப்பிட்டேன். இந்தக் குமிழியில் மேலும் சிலர் எழுகின்றனர். வரலாற்றுப் பாடம் கற்பிப்பதில் சொல்லய்யா என்று செல்லப் பெயருடன் விளங்கின எஸ். அரங்கசாமி அய்யங்கார் முன்னணியில் நிற்கின்றார். இவர் ஐந்தாம் படிவத்தில் வரலாறு கற்பித்தார். நான்காம் படிவத்தில் கற்பித்தவர் மணி அய்யர். ஆறாம் படிவத்தில் கற்பித்தவர் யார் என்பதை இப்போது நினைவுகூர இயலவில்லை. அன்று ஆறாம் படிவத்தில் வரலாறு கற்பிப்பதற்கு நல்லாசிரியர் எனக்கு அமையவில்லை என்பதுதான் என் கணிப்பு. பாட நூல்களைப் படித்துக் காலந்தள்ளி தேர்வும் எழுதி விட்டேன். ஆனால் செல்லய்யா கற்பித்ததைத்தான் இன்றும் நினைவுகூர முடிகின்றது. இவருடைய தோற்றமே மனம் கவர்வதாக இருந்தது. ஒல்லியான உடலமைப் புடனிருந்தாலும் இவர்தம் பொன்னிறமேனி மனங்கவர்வ தாக இருக்கும். பஞ்சகச்சமும், மூடிய மேலங்கி (Close Coat) அதன்மீது திகழும் விசிறி மடிப்புடன் கூடிய அங்கவஸ்திரம், முல்லை மலர்போன்ற வெண்ணிறத் தலைப்பாகை, நெற்றி