பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர்கள்-வேறு நால்வர் 223 யில் தீட்டப்பெற்ற வட கலைத் திருமண்காப்பு, புன் முறுவல் பூத்த முகம் இவை இவருக்கு மேலும் கவர்ச்சியை அளித்தன. வரலாற்றுப்பாடம் கற்பிப்பதில் இவருக்கு நிகர் இவரே. இவரும் வகுப்பில் உட்காருவதில்லை. மேசை யருகில் நின்று கொண்டே கதை சொல்லுவது போலவே வரலாற்றை ஆற்றொழுக்கு போன்ற ஈரத்தமிழில் இன்முகத் துடன் கூறி வருவது எங்கட்கெல்லாம் குளிர்ந்த இனிப்புப் பானம் பருகுவது போன்றிருக்கும். ஏழுமலையான் சந்நிதி யில் வழங்கப்படும் பச்சைக் கர்ப்பூரத் தீர்த்தம் பருகுவது போல் உணர்வு எழும். கதை சொல்லும் பண்பு வரலாற்று ஆசிரியரிடம் அமைந்திருக்க வேண்டிய ஒப்பற்ற பண்பாகும். கதை சொல்லுவதன் நோக்கமே இளஞ்சிறார்களுக்கு மகிழ்ச்சியை யும் உற்சாகத்தையும் அளிப்பதாகும் என்பதை உயர் நிலைப் பள்ளியில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்கள் உணர்தல் வேண்டும். இதனால் சிறார்கட்குப் படிப்பிலும் பள்ளியின் பாலும் ஆர்வம் உண்டாகும். வரலாற்று வகுப்பு எப்பொழுது வரும் என்ற பேரவா மனத்தில் குமிழியிட்டுக் கொண்டேயிருக்கும். ஆசிரியர் நிரல்படி நிகழ்ச்சிகளைக் கோவையாக ஆற்றொழுக்கான தமிழில் சொல்லும்போது அதைக் கேட்கும் சிறார்களிடம் எண்ண வளர்ச்சி, கற்பனை யாற்றல், நினைவாற்றல் ஆகியவை சிறந்த முறையில் வளர ஏதுவுண்டு; மனமும் கருத்துகளுடன் ஒன்றுபட்டு வரலாற்று நிகழ்ச்சியில் ஈடுபடுவதனால் சிறார்களின் கவனிக்குந் திறனும் வளரும். வரலாறு கற்பிக்கும் ஆசிரியரின் ஆயத்தம் மிகவும் இன்றியமையாதது. இவர் உற்சாகமாவும், முகமலர்ச்சி யுடனும், மகிழ்ச்சியுடனும் இருத்தல் வேண்டும். ஒரு குறிப் பிட்ட வகுப்பில் சொல்ல வேண்டியவற்றை மனத்தில் நிரல்