பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 நினைவுக் குமிழிகள்-1 பட அமைத்துக் கொள்ளல் வேண்டும். தேனிக்கள் இருக் கின்றன; அவை மலர்தோறும் நாடிச் சென்று தேனை எடுத்துத் தம் உமிழ் நீருடன் கலந்து அருமையான தேனாகக் கூட்டில் திரட்டிவைக்கின்றன. செடியிலுள்ள மலர்களின் தேனும் தேனிக்கள் தேடிவைத்திருக்கும் தேனும் ஒன்றாகுமா அதுபோலவே, பாடநூல்களிலுள்ள செய்திகளும் ஆசிரியரின் வாயிலிருந்து அநுபவத்துடன் பிறக்கும் செய்திகளும் வரலாற்று உண்மைகளில் வேறுபடாதவை என்றாலும், மாணாக்கர் மனத்தில் விழும்போது கட்டாயம், இவற்றில் ஒரு வித வேறு பாடு தோன்றத்தான் செய்யும். வரலாறு நம் மூதாதையரின் வாழ்க்கையைப்பற்றியது. ஒரு சிறந்த வரலாற்றுக் கதை. பண்டைய நிகழ்ச்சிகட்கு உயிர் கொடுத்து வடிவம் அமைக்கின்றது. அந்தந்த நாட்டுக் கதைகளைப் பொறுத்த மட்டிலும் இது முற்றிலும் உண்மை யாகும். ஒரு நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்ப்பதற்கு வரலாற்று நிகழ்ச்சிகள் பெருந்துணை புரிகின்றன. ஒவ்வொரு நாட்டு வரலாற்றிலும் தலை சிறந்த பல பெரியார்கள், நல்லாட்சி செய்த நாயகர்கள், பக்தியை வளர்த்த ஞானிகள், செயற்கருஞ் செயல்களைப் புரிந்தவர்கள், முடிவான தீர்மானம் உள்ளவர்கள், பொறுமையையே அணிகலன் களாகக் கொண்டவர்கள் ஆகியோர் பலர் காணப்படு இன்றனர். நான் படித்த காலத்தில் வரலாறு என்பது மன்னர்களின் வரலாறாகவே இருந்தது. மன்னர்கள் ஆட்சி புரிந்த விதம் அவர்கள் காலத்தில் நடந்த போர்கள், அவற்றின் முடிவுகள், புகழ்சான்ற சமாதானங்கள், சமூகச் சீர்திருத்தங்கள் போன்ற நிகழ்ச்சிகளையே நுவல்வனவாக இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியில் எழுதப்பெற்ற வரலாற்றுப் பாடநூல்கள் பெரும்பாலும் அவர்கள் ஆட்சி முறையைப் போற்றுவனவாகவே அமைந்திருந்தன. இஸ்லாமியர்களின்