பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர்கள்-வேறு நால்வர் 225 "படையெடுப்பு அவர்கள் தில்லியிலிருந்து கொண்டு நாட்டை ஆண்ட முறை, வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் ஆண்ட மன்னர்களின் அட்டகாசங்கள், ஃபிரெஞ்சுக்காரர் கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் நம்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்த வரலாறுகள், அவர்களிடையே நடைபெற்ற போட்டியும் பொறாமையும், உள்நாட்டு மன்னர்களை அவர்கள் தாயக் காய்கள்போல் கையாண்டு நடத்திய அக்கிரமங்கள் இறுதியில் பிரிட்டிஷார் இந்தியா முழுவதையும் ஒரு குடைக் கீழ்ஆண்ட அற்புத நிகழ்ச்சிகள் இவை இந்திய நாட்டின் வரலாறாக அமைந்திருந்தது. வரலாறு எழுதுவோரும் ஆட்சியாளர்கட்கேற்ற துதி பாடுவதும், தாளம் போடுவதுமாக இருந்தனர். அப்படிப் பட்ட பாடநூல்கள்தாம் அரசினரால் ஏற்கக் கூடியனவாக இருந்தன. தமிழ் நாட்டிலிருந்த சங்க கால வள்ளல்கள், புரவலர்கள், பெரும்புலவர்கள், பக்திமான்கள், சோழர், பல்லவர், பாண்டியர், சேரர்கள் ஆட்சி புரிந்த வரலாறுகள் இவர்கள் பாடநூல்களில் விரிவாக இடம் பெறவில்லை. இவை யெல்லாம் ஒரு முப்பது பக்கங்களுக்குள் அடங்குவனவாயின; பெரும்பாலான முக்கிய நிகழ்ச்சிகள் விடுபட்டும் போயின. வரலாறு பொய்யுரைகளின் களஞ்சியம் (History is a pack of lies) என்று சொல்லத்தக்கனவாக இருந்தது.நாடு விடுதலை பெற்ற பிறகு எழுதப்பெறும் வரலாற்று நூல்கள் உண்மை நிகழ்ச்சிகளை உணர்த்துவனவாக அமைகின்றன. பண்டைய பெருமைகள் பாங்குடன் எடுத்துகாட்டப் பெறுகின்றன. சிவாஜியின் துணிகரச் செயல்களும், கட்டபொம்மனின் வீரச்செயல்களும், விநாயக தாமோதர சாவர்க்காரின் துணிகரச் செயல்களும், நேதாஜியுடன் வீரச்செயல்களும், காந்தியடிகளின் நாட்டுப்பற்றும், அவர் சமூகத்திலும், —15–