பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நினைவுக் குமிழிசள் அரசியிலிலும் செய்த குருதி சிந்தாப் புரட்சியும் இன்று எழுதப்பெறும் வரலாறுகளில் இடம் பெறுகின்றன. இவற்றையெல்லாம் அக்காலத்தில் நான் படிக்கும் பேறு பெறவில்லை. செல்லய்யா அவர்கள் வரலாறு கற்பித்த விதம் மிகமிக அற்புதம். அசோகரின் ஆட்சியின் மாட்சி, முகலாயர் படை யெடுப்பு, அல்லாவுத்தீன்கில்ஜியும் அவன் தானைத் தலைவன் நாட்டைக் கொள்ளையடித்த விதமும், துக்ளக் ஆட்சி புரிந்த விநோதங்கள் பாபர் முதல் ஒளரங்கசீப் வரை தில்லியிலிருந்து கொண்டு ஆட்சி புரிந்த வரலாறு இவற்றை ஆற்றொழுக்கு போன்ற தமிழில் பாட்டி பேரனுக்குக் கதை சொல்லுவதுபோன்று சொன்ன முறை இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. இவர் கூறியவற்றை மீண்டும் பாடநூல்களில் படிக்கும்போது நிகழ்ச்சிகள் மனத்தில் ஆழப்பதிந்தன. அடுத்து வரலாறும் புவியியலும் கற்பித்த மணி அய்யர் (என். சுபபிரமணிய அய்யர்) நினைவுக்கு வருகின்றார். பெரும்பாலும் இவர் உட்கார்ந்து கொண்டே கற்பித்தாலும் கற்பித்தல் மிக எடுப்பாக இருக்கும், உரைக்கப்படும் பொருள் உள்ளத்தில் நன்கு அமைத்துக் கொண்டு கற்பிப்பதில் இவருக்கு நிகர் இவரே. பஞ்சகச்சம், திறந்த மேலங்கி (open coat) அதில் அழகாக அணி செய்யும் கழுத்துப் பட்டைத் தொங்கல், முல்லை வெளுப்பில் கட்டப்பெற்ற தலைப் பாகை இவை இவர்தம் கனமான உடலமைப்புக்குப் பொலிவினைத் தந்தன. மாநிறமாக இருந்தாலும் இவர் நெற்றியில் திகழும் கோபிச் சந்தன.பிறை இவர்தம் ஆளுமைக்கு (Personality) ஒருவித களையைத் தந்தது. கடல் மடை திறந்தது போன்ற தமிழ் இவர் வாயிலிருந்து வெளிப்படும்போது வகுப்பில் நாலாபுறமும் சரியாகப் பாயும்-பள்ளமடைகளில் பாத்தி