பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர்கள்--வேறு நால்வர் 227 யெங்கும் நீர் பரவுவது போல நீர் பாத்திகளில் நன்கு குமிழி யிட்டுப் படிவது போலவே இவர் ஈரத்தமிழில் வெள்ளமிட்டு வரும் கருத்துகள் நுங்கும் நுரையுமாக மாணாக்கர் மனத்தில் நன்கு படியும்; ஆழமாகவும் பதியும். நான்காம் படிவத்தில் தான் இவரிடம் வரலாறு கற்கும் பேறு பெற்றேன். நன்முறை யில் எழுதப்பெற்ற பாட நூல்களும் கிடைத்தமையால் இவர் கற்பிக்கும் பாடங்களைப் பாட நூல்களைக் கொண்டும் கற்க முடிந்தது. வரலாறு கற்பித்ததை விடப் புவியியல் கற்பித்தது இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. நான் படித்த காலத்தில் புவியியலுக்கு சரியான நூல்கள் யாரும் எழுதவில்லையாதலால், நல்ல பாடநூல்களைப் பார்க்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் மணி அய்யர் அற்புதமாகக் கற்பித்தார். கடல் மடை திறந்தது போன்ற தமிழ் வெள்ளம். நன்றாகக் கற்பித்த பிறகு சுருக்கமான குறிப்புகளைத் தருவார்; சிலவற்றைக் கரும்பலகையிலும் எழுதுவார். நான் இவற்றை ஒழுங்குபடுத்தி இரண்டு குயர் கோடுகளில்லாத குறிப்பேட்டில் மிக நன்றாக எழுதி வைத் திருந்தேன். வண்ணக்காம்புகளையும், வண்ணப்பென்சில் களையும் கொண்டு அழகான வரைபடங்களை வரைந் திருந்தேன். குறிப்பேடு பல்லோர் பாராட்டும் வகையில் அற்புதமாக அமைந்திருந்தது. முத்துக் கோத்தாற் போன்ற என் கையெழுத்தும் குறிப்பேட்டின் பொலிவை மேலும் அதிகரித்தது. இதைப் புவியியல் களஞ்சியம் என்றே சொல்லலாம். பள்ளியிறுதித் தேர்வு மாணாக்கர்கட்கு ஒரு வரப்பிரசாதம் போல் அமைந்திருந்தது. நான் பள்ளியிறுதித் தேர்வில் நல்ல வெற்றி பெற்று வீடு திரும்பும்போது இந்தக் குறிப்பேட்டை எதிர்கால மாணாக்கர்கட்கு ஒரு முன் மாதிரி யாக இருக்கட்டும்" என்று கூறி வாங்கி வைத்துக் கொண்டதை இன்று நினைவு கூர்கின்றேன்.