பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 நினைவுக் குமிழிகள்-1 ஒவிய ஆசிரியர் ஒரு நாயுடு என்பதாக நினைவு. நன்முறை யில் ஓவியம் வரைவதைக் கற்றுக் கொடுத்தார். இயல்பாகவே நன்கு ஒவியம் வரையும் பழக்கம் என்னிடம் அமைந்திருந்தது. நான்காம் படிவத்தில் மட்டிலும் இப்பாடம் நடைமுறை யிலிருந்தது. இவர் கொடுத்த பயிற்சிதான் ஐந்து, ஆறு படிவங்களில் வரலாற்றுப் படங்களையும் புவியியல் படங் களையும் தெளிவாகவும் அழகாகவும் வரைவதற்குக் கை கொடுத்து உதவியது: கல்லூரி வாழ்க்கையிலும் அறிவியல் பாடத்தில் அவ்வப்போது வரைய வேண்டிய கோட்டுப் படங்களை அற்புதமாக வரைவதற்குத் துணையாக இருந்தது. உடற்பயிற்சி ஆசிரியரை நினைவு கூரமுடிய வில்லை. யாரோ ஒர் அய்யர் என்பதாக நினைவு. ஆடுகளத் திற்கு அதிகமாகப் போகும் பழக்கம் என்னிடம் இல்லை. சில சமயம் போகும் போது ரிங் டென்னிஸ், வாலி பால் இவற் றினில் மட்டிலும் ஈடுபட்டேன். உணவு விடுதியில் இந்த இரு விளையாட்டுகளையும் தொடர்ந்து விளையாடியதாக நினைவு. குமிழி-29 29. பெரிய தமிழ் அய்யா குமாரவிரய்யா இப்பொழுது எழும் குமிழியில் தமிழாசிரியர்களில் பெரியவர் வி. குமார வீரய்யர் காட்சி அளிக்கின்றார். இவர் வீர சைவர். இவர் நான்காம் படிவத்திலும் ஆறாம் படிவத் திலும் தமிழ் கற்பித்தது நினைவுக்கு வருகின்றது. வீ. குமார வீரய்யர் பஞ்சகச்சம், முழு மேலங்கி, வெள்ளைத் தலைப்பாகை, மடித்த நிலையிலுள்ள மேலாடை இவற்றுடன் வகுப்பிற்கு வருவார். மாநிறமுள்ள திரு மேனியைக் கொண்ட இவர் நெற்றியில் திருநீற்றுப் பட்டை