பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தமிழ் அய்யா குமாரiரய்யர் 229 யும், சந்தனப் பொட்டும் திகழும். பார்ப்பதற்கு அவ்வளவு வசீகரமாக இராது இவரது தோற்றம். இலக்கணம் சுவை யாகக் கற்பிப்பதில் தனித்திறம் கொண்டவர். கவிதையை இசையுடன் படிக்காவிட்டாலும் கற்பித்தல் கவர்ச்சியுடைய தாக இருக்கும். கிண்டலும் நகைச்சுவையும் இவரிடம் அதிக மாகக் காணலாம். நகைச்சுவையைக் கிளப்பி விட்டு தாம் முறுவலிப்பதுடன் நிறுத்திக் கொள்வார். மாணாக்கர்கள் வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது. வீரசைவம் பற்றிய ஏதோ ஒரு வெளியீட்டைக் கவனிக்கும் பொறுப்பு இவரிடம் இருந்ததாகப் பேசிக் கொள்வார்கள். சில நாட் களில் இரவு நேரம் அதிகமாக விழித்திருக்கும் வாய்ப்பு இருந்தபடியால் மறுநாள் வகுப்பு சுவாரஸ்யமாக இருக்க முடியாது. வகுப்பில் நுழைந்து, இருக்கையில் அமர்ந்தவுடன் உறங்கி விடுவார்; சில சமயம் குறட்டையொலியும் கேட்கும். மாணாக்கர்கள் இவர் உறக்கத்திற்குத் தடை செய்யக் கூடாது என்ற நன்னோக்கத்துடன்” கப்சிப் என்று வாளா இருப்பார்கள். சிலர் பாட நூல்களை பார்த்துக் கொண் டிருப்பதாகப் பாசாங்கு செய்வார்கள். ஒரு சிலர் சாடை யாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் வெளியில் செல்லவும் திரும்பவுமாக இருப்பார்கள். சிலசமயம் தலைமை யாசிரியர் மேற்பார்வைக்காகத் தாழ்வாரத்தில் நடக்கும் போது இவர் உறங்குவது அவர் கண்ணில் படுவதுண்டுக் பார்த்துக் கொண்டு பாராதவர் போல் முறுவலித்துக் கொண்டே போய் விடுவார். இவர் உறங்குவதன் காரணம் தலைமையாசிரியர் நன்கு அறிந்தவராகையால் இவரிடம் இப்போக்கைக் காண முடிந்தது. பின்னர் தனிமையில் அவர் இவரிடம் இதுபற்றிப் பேசியிருக்க வேண்டும் என்று ஊகம் செய்கிறேன். இதனால் அவர் சில நாட்கள் உறங்குவதை நிறுத்திக் கொள்ள முடிகின்றதில்லை. மனம் ஒய்வை நாடும் போது உடலும் அதற்கு ஒத்துத்தானே போக வேண்டும்?