பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நினைவுக் குமிழிகள்-1 வகுப்புக்கு வந்து இருக்கையில் அமர்ந்தவுடன் ஒருவர் ஆழ்துயிலில் இறங்க வேண்டுமானால் அதற்கு உடலும் உள்ளமும் ஒத்துப் போக வேண்டும். இவ்வாறு உறங்கு பவருக்கு ஒரு கலை உணர்ச்சியும் வேண்டும் எனத் தோன்று கின்றது. நாற்பது அல்லது ஐம்பது மாணாக்கர்கள் தம் முன் பாடம் கேட்பதற்காகவே அமர்ந்திருக்க அதனை மறந்து குறட்டை விடும் அளவுக்குத் தூங்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு துணிவு வேண்டும். பள்ளி ஒழுங்கு விதிகளைப் புறக்கணிக்கும் அளவுக்கு நெஞ்சில் உரம் வேண்டும். ஒய்வு வேண்டுமென்றால் விடுப்பு எடுத்துக் கொண்டு இல்லத்தில் உறங்கலாம். இக்குறைகளெல்லாம். வி. குமார வீரய்யரிடம் இருந் தாலும் அவர் பாடம் சொல்லுந்திறன் இவற்றை மறைத்து விடுகின்றது. பள்ளிகளில் மாணாக்கர்கள் பயிலும் பாடங் களுள் மாணாக்கர்கட்கு அதிக அருவருப்பையும் அச்சத்தை யும் தருவது இலக்கண பாடமாகும். இன்று பெரும்பாலும் இலக்கணம் மாணாக்கர் காதில் புகாத உலக்கை'யாகவே காட்சியளிக்கின்றது; புலவர் வகுப்பு போன்ற மேல் வகுப்பு களிலும் மாணாக்கர்கள் இலக்கணத்தைச் சிம்ம சொப்பன’ மாகவே கொள்ளுகின்றனர்; நடைமுறையில் இதை இன்றி யமையாததாகக் கருதுவதில்லை. இந்நிலைக்குக் காரணம் என்ன? மாணாக்கர்கள் இலக்கணத்தை வெறுப்பதற்கு இலக்கணம் காரணம் அன்று; மாணாக்கர் அறிவு நிலையும் காரணம் அன்று. கற்பிக்கும் ஆசிரியர்களே இந்நிலைக்குக் காரணம் என்று கூறவேண்டும். இலக்கணம் கற்பதில் சுவை யற்ற முறைகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. இலக்கணத்தை எதற்காகக் கற்கின்றோம் என்பதை அறியாமல் மாணாக்கர்கள் கற்கின்றனர்; கற்பிக்கும் ஆசிரியர் களும் இலக்கணம் கற்கும் நோக்கத்தை, எடுத்துக்காட்டு களால் விளக்கி அதன் இன்றியமையாமையை அவர்கட்கு