பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தமிழ் அய்யாகுமார வீரய்யர் 231 உணர்த்துவாரிலர். எய்தவன் இருக்க அம்பை நோவதால் பயன் என்ன? கொய்னா மருந்தைச் சருக்கரைப் பாகில் தோய்த்து நோயாளிகட்குச் செலுத்துவது போல இலக்கணத்தை அதுபவ முறையில் இலக்கிய பாடத்துடன் இணைத்துக் கற்பித்தால் மாணாக்கர்கள் கட்டாயம் இலக்கணத்தை விரும்புவர். நல்ல முறையில் கற்பித்தால் ஏனைய பாடங்களைக் கற்பதைபோல் அதிக இன்பத்தையும் பெறுவர். கற்கும் நோக்கத்தை விளக்காது, கட்டாயப் படுத்திக் கற்பிப்பதால்தான் மாணாக்கர்கட்கு இலக்கணம் மிகவும் கசப்பாக உள்ளது. இதை ஒரு தலைவலியாகவே" இவர்கள் கருதுகின்றனர். கற்றலின் விதிகளையும் பயிற்றுமுறைகளையும் சரியாக அறியாத ஆசிரியர்கள் தொடக்க நிலை வகுப்புகளிலேயே இலக்கணத்தைத் தொடங்கி மா ண ா க் க ர் க ளி ட ம் வெறுப்புணர்ச்சியை எழுப்பி விடுகின்றனர். அன்றியும் இலக்கியத்துடன் இணைத்துக் கற்பிக்காமல் தனியாகக் கற்பிப்பதனாலும், விளையாட்டு முறைகளை மேற் கொள்ளாததனாலும் அவ்வெறுப்புணர்ச்சி இன்னும் மிகு கின்றது: இலக்கணம் கற்கும் இன்றியமையாமையை மாணாக்கர்கள் உணர்வதே இல்லை. கற்பிக்கும் பொழுதும் ஆசிரியர்கள் மாணாக்கர்களின் பட்டறிவில் வரக்கூடிய எடுத்துக்காட்டுகளைக் காட்டுவதில்லை; இவற்றை மிகுதி யாகவும் காட்டுவதில்லை. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் விதி வருமுறையில் கற்பிப்ப தில்லை. விதி விளக்கு முறையினையே மேற்கொள்ளு கின்றனர். விதிகளையும் நூற்பாக்களையும் முதலில் கூறிப் பின் எடுத்துக்காட்டுகளால் இவற்றை விளக்குவது தெரிந்த வற்றிலிருந்து தெரியாதவற்றிற்கும் (From known to un