பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நினைவுக் குமிழிகள்-1 known), GreiffolduffaffGäg, 8&s Gyáðub (From simple to complex) போக வேண்டும் என்ற அடிப்படைக் கருத்து களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. இங்கும் இலக்கணத்தை மொழிப்படத்துடனும் கட்டுரை வரைத லுடனும் பொருத்திக் காட்டிக் கற்பியாமல் தனிப்பாட மாகவே கற்பிக்கின்றனர். நடைமுறையில் வேண்டப்படுவது எது? வேண்டப்படாதது எது? என்று பாகுபாடு செய்யாது எல்லா விதிகளையும் கற்பிப்பதுடன் அவற்றை நெட்டுருச் செய்யும்படியும் வற்புறுத்துகின்றனர். மாணாக்கரின் பட்டறிவுக்கேற்ற எடுத்துக்காட்டுகளைத் தேர்ந்தெடுத்துக் கற்பியாமல் பழைய இலக்கண நூல்களில் உரையாசிரியர்கள் காட்டியுள்ளவற்றையே எடுத்துக் காட்டிக் கற்பிக்கின்றனர். தனித்தனிப் பயிற்சி முறைகளை இலக்கணப் படிப்பில் புகுத்துவதில்லை. கற்பிக்கும் ஆசிரியர்களும் இலக்கணத்தில் பற்றும் விருப்பமும் கொண்டு உற்சாகமாகக் கற்பிக்காமல் "வீண் கடனுக்கு என்றே கற்பிப்பதால், கற்கும் மாணாக்கர் களும் இதை விரும்பிக் கற்பதில்லை. குமார வீரய்யர் இலக்கணத்தைச் சுவையுடன் பள்ளி மாணாக்கர்கட்கு கற்பிப்பதில் நிகரற்றவர் என்று சொல்லலாம். ஐந்தாம் படிவத்தில் நான்காம் வேற்றுமைப் பொருள்களைக் கற்பித்ததை இன்றும் நினைவு கூர முடி கின்றது. அடியிற்கண்ட சொற்றொடர்களைக் கரும்பலகை யில் எழுதி ஒவ்வொரு மாணாக்கராக வாய்விட்டுப் படிக்கும் படி ஏவுவார். (அ) எளியவர்க்கு அன்னம் இட்டான். (ஆ) பாம்புக்குப் பகை கருடன். (இ) இராமனுக்கு நண்பன் சுக்கிரீவன். (ஈ) அரசருக்கு முடி உரியது. (உ) காப்புக்குப் பொன் கொடுத்தான்.