பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தமிழ் அய்யா குமாரiரய்யர் 233 (ஊ) கூலிக்கு வேலை செய்தான். (எ) இராமனுக்குத் தம்பி இலக்குவன். கீழ் வகுப்புகளில் நான்காம் வேற்றுமையின் உருபைப் பற்றிப் படித்திருப்பதால் அதே உருபு 'கு' என்பதை வினாக் களை விடுத்தே வருவித்து விடுவார். மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களில் நான்காம் வேற்றுமை வரும் இடத்தை மாணாக்கர்களைச் சுட்டிக் காட்டும்படி ஒவ்வொருவராக ஏவுவார். (அ)-இல் இட்டான்' என்பது கொடுத்தலைக் குறிக் கின்றது என்பதை வினாக்களின் மூலம் மாணாக்கர்களிட மிருந்தே வருவித்து விடுவார். இடுதலின் செயப்படுபொருள் "அன்னம்’ என்பதை மாணாக்கர்களிடமிருந்த வருவிக்கப் பார்ப்பார். 40 மாணாக்கர்களில் ஒருவராவது சொல்வி விடுவர். அதனைத் தமக்குரியதாக்கிக் கொள்பவர் "எளியவர். எனவே, இரவலர் கோடற் பொருளாகின்றனர். இங்கு 'கு' உருபு கொடைப் பொருளில் வந்துள்ளதை மாணாக்கர்கட்குத் தெளிவாக விளக்குவார். (ஆ)-இல் கருடனித்திலுள்ள பகை தொடர்தற்குரிய இடம் எது?’ என்று வினவுவார். யாராவது ஒருவர் பாம்பு' என்று சொல்லி விடுவார். பாம்பு பகைத்தொடர் பொருள் என்பதைத் தெளிவாக்குவார். (இ)-இல் நட்பு தொடர்தற்கு இடம் இராமன்' என்பதை எப்படியோ மாணாக்கர்களிடமிருந்தே வருவித்து விடுவார். இராமன் நட்புத் தொடர் பொருள் ஆகின்றதை நன்கு விளக்குவார். (ஈ)-இல் அரசரோடு பொருந்துதற்குத் தகுதியாகிய பொருள், முடி. அதனையுடைய பொருள் அரசர் என்பது. அரசர் தகுதியுடைப் பொருள் ஆவதைத் தெளிவுறுத்துவார்.