பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நினைவுக் குமிழிகள்-1 (உ)-இல் பொன்’ என்பது காப்பு செய்தற்கு முதற் காரணப் பொருள் என்பதை விளக்குவார். அதனாலாகிய காரணம் காப்பு என்பதைக் காட்டி, காப்பு "முதற் காரண காரியப் பொருள்' என்பதைச் சுட்டி உரைப்பார். (ஊ)-இல் வேலை நிமித்த காரணம் என்பதை விளக்கிச் சொல்வார். அதனாலாகிய காரியம் கூலி. இதனை எடுத்துக் காட்டி (அல்லது வினாக்கள் மூலம் வருவித்து) கூலி நிமித்த காரணகாரியப் பொருள்' என்பதைத் தெளிவாக்குவார். (எ)-இல் இலக்குவனிடத்துள்ள தம்பி என்னும் முறைக்குத் தான் இயைந்து நிற்கும் பொருள் இராமன். இது முறைக்கியை பொருள் என்பதை விளக்கி உரைப்பார். இவ்வாறு விதிவருமுறையைக் கையாண்டு நான்காம் வேற்றுமைப் பொருள்களை வருவித்து, இயலாத இடத்து தானே விளக்கிக்,காட்டி, நான்காம் 'வேற்றுமை உருபு கு'; அதன் பொருள் கொடை, பகை, நட்பு, தகுதி, அது ஆதல், பொருட்டு முறை முதலியனவாம்" என்ற விதியை மாணாக்கர்களையே உண்டாக்கும்படி செய்து விடுவார். பிறகு ஆசிரியர் நினைவில் வைத்துக் கொள்வதற்கு எளிதாக இருக்கும் இவ்விதியை இலக்கண நூலில் நூற்பாவாகச் செய்துள்ளனர் என்பதைக் கூறுவார். நான்கா வதற்குரு பாகுங் குவ்வே கொடைபகை நேர்ச்சி தகவது ஆதல் பொருட்டுமுறை ஆதியின் இதற்கிதெனல் பொருளே’ (நேர்ச்சி-நட்பு: தகவு-தகுதி; அது ஆதல்-காரணமே காரியமாதல். பொன்னே காப்பாதலை அறிக.) என்ற நூற்பாவை கரும்பலகையில் எழுதிக்காட்டி மேற்படி நூற்பா விட்டமின் பி. காம்பிலெக்ஸில் (Vitamin Capsule) 12. நன்னுால்-298