பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தமிழ் அய்யா குமார வீரய்யர் 235 பல சத்துகள் அடங்கியிருத்தல் போல் பல பொருள்களையும்’ இந்த நூற்பா கொண்டிருத்தலின் அற்புதத்தை எடுத்துக் காட்டி மாணாக்கர்களை வியப்புச் சுவையில் ஆழ்த்துவார். சில மாணாக்கர்களும் இலக்கணம் அறியாத பெரியோர் களும் உயர்திணைக்கண் முறைப் பொருளில் நான்காம் வேற்றுமை உருபன்றி ஆறாம் வேற்றுமை உருபு சேர்த்து "எனது மகன்’ என்று எழுதுவதைத் தகுதியன்று என்பதனை இவ்விடத்தில் எடுத்துக்காட்டி விளக்குவார். 'அது' என்னும் Ք-Gեւ: அஃறிணையிலன்றி உயர்திணையில் வருதல் அமையாது என்பதையும், அது முறைப் பொருளில் வருதல் இல்லை என்பதையும் விளக்கிக் காட்டுவதற்கு இவ்விடத்தைச் சிறந்ததாகப் பயன்படுத்திக் கொள்வார். அடியிற் காணும் சில எடுத்துக் காட்டுகளைத் தந்து நான்காம் வேற்றுமை உருபு பற்றியும் அதன் பொருள்கள்பற்றியும் பொருத்திக் காட்டுமாறு வீட்டு வேலை"யாகத் தருவார். (அ) இரவலர்க்குப் பொன்னைக் கொடுத்தான். (ஆ) எலிக்குப் பகை பூனை. (இ) சாத்தனுக்கு நட்பாளன் கொற்றன். (ஈ) வெற்றியடைந்தவனுக்குப் பரிசு உரியது. (உ) உணவுக்கு நெல் கொடுத்தான். (ஊ) சன்மானத்துக்கு உழைத்தான். (எ) தசரதனுக்கு மகன் இராமன். இவ்வாறு விதியை எடுத்துக் காட்டுகளில் பொருத்திக் கற்றலைத்தான் விதிவிளக்கு முறை என்பர் முறைவல்லார். இதனை நினைவில் கொண்டு அற்புதமாகக் கற்பிப்பார் 'வீட்டு வேலை தருவதன் மூலம். கவிதை கற்பிப்பதில் கவிதையின் சுவையை எடுத்துக் காட்டுவதில் இவர் திறனுடையவர் என்று சொல்ல