பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நினைவுக் குமிழிகள்-1 முடியாது. கவிதையை நன்கு விளக்குவதில் வல்லவர். ஒரு சில இலக்கணக் குறிப்பையும் அளவாக எடுத்துக் காட்டி கவிதை கற்பித்தலைப் பயன் உடையதாகச் செய்து விடுவார். நான் பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும் போது வாலி வதைப் படலம் பாடமாக இருந்தது. இதனைக் கற்பித்த முறையை இப்போது நினைவு கூர முடிகின்றது. கண்ணுற்றான் வாலி நீலக் கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை " (முகில்-மேகம்; கமலம்-தாமரை, வரிவில்-கட்ட மைந்த வில்; மாலை-திருமாலின் திருவவதாரமானஇராமபிரானை) என்ற பாடற்பகுதியைக் கற்பித்தது அற்புதமாக இருந்தது. இல்லறந்துறந்த நம்பி தங்கள் பொருட்டு வில்லறத்தையும் துறந்தனனோ என்று நகைத்து, நாணத்துடன் நிற்கும் வாலியின் முன்னர் இராமன் வரும் காட்சியை இப்பாடற் பகுதி காட்டுகின்றது என்று கூறுவார். இங்கு இயல்பாக நிகழும் தன்மையில் கவிஞன் தன் கருத்தினை ஏற்றிக் கூறி யுள்ளான் என்பதை எடுத்துக்காட்டுவார். பொருள்களிடத்து இயல்பாக நிகழும் தன்மையில் கவிஞன் தன் கருத்தினை (குறிப்பினை) ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணியாகும் என்று தற்குறிப்பேற்ற அணியின் இலக்கணத்தை விளக்குவார். இயல்பாக இராமன் வாலிமுன் வருவதைக் கம்பர் பெருமான் வானத்திலுள்ள நீலக் கார்முகில் தன்னிடம் தாமரை மலர் பூத்து நிற்க, கட்டமைந்த வில்லொன்றைக் கையில் ஏந்திக் கொண்டு வரும் திருமால்' என்று தன்னுடைய கருத்தினை ஏற்றிக் கூறியிருப்பதனை எடுத்துக்காட்டி விளக்குவார். கவிதைப் பாடத்தை இலக்கணப் பாடத்துடன் அளவாகப் 13. வாலிவதை-75