பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தமிழ் அய்யா குமாரnரய்யர் 237 பொருத்திக் காட்டி கவிதை கற்பித்தலில் இலக்கணக் களை’ தோன்றச் செய்து வகுப்பை வியப்புறச் செய்ய வைத்து விடுவார். வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே! நீ பரதன்முன் தோன்றினாயே’’ என்ற பாடற்பகுதியை அற்புதமாக விளக்குவார். முன்பு கைகேயிக்கு இரண்டு வரம் அளித்ததனால் சத்தியம் பிறழலாகாது என்பதற்காகத் தன் அருமையான மூத்த மகன் காடுறை வாழ்க்கையை ஏற்கும்படி நேர்ந்தது என்பதை விளக்குவார். தன் மகனைக் காட்டுக்குத் துரத்தி விட்டுத் தான் உயிர் வாழ்ந்தான் இக்குலத்தில் ஒருவன்’ என்ற பழிப்புத் தான் பிறந்த மது குலத்திற்கு வராதபடி புத்திர சோகத்தால் உயிர் நீத்த பெருமகன் தசரத சக்கரவர்த்தி என்பதை எடுத்துகாட்டி விளக்கும்போது மயிர் சிலிர்க்கும்; உடல் புளகாங்கிதமாகும். துயவன்’ என்ற சொல்லால் தசரதனைக் குறிப்பிடவைத்த நயத்தை எடுத்துக் காட்டுவார். இத்தகைய தூயவனுக்கு நீ மைந்த னாகத் தோன்றினாயே’-என்ற அடியினால் 'நீ இத்தகைய பரிசுத்தவானுக்கு மகனாகப் பிறத்ததற்குச் சிறிதும் தகுதி யற்றவன்' என்ற ஏளனக் குறிப்பை எடுத்துக்காட்டுவார். அதுவும் 'நீ பரதனுக்குத் தமையனாகத் தோன்றினாய், என்ற அடியில் ‘துயவனின் மைந்தன் பரதன். இவன் அதிதூயவன்; தியாக மூர்த்தி; மகாஉத்தமன், இவனுக்கு நீ அண்ணனாகத் தோன்றியது சிறிதும் பொருத்தமற்றது’ என்ற கவிஞனின்'கிண்டலை எடுத்துக்காட்டி எல்லோரையும் வியக்க வைத்து விடுவார். 14. டிெ-76