பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நினைவுக் குமிழிகள்-1 அடியிற் குறிப்பிடப் பெற்றுள்ள இரண்டு பாடல்களை அற்புதமாக விளக்கியது இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. கோவியல் தருமம் உங்கள் குலத்துதித் தோர்கட் கெல்லாம் ஒவியத் தெழுத வொண்ணா உருவத்தாய் உடைமை யன்றோ ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை." (கோஇயல் தருமம்-அரச நீதி; ஒவியம்-சித்திரம்; ஆவி. உயிர்: அன்னம்-தூயவள்; அமிழ்தின்-அமுதத்தைப் போல; தேவி-மனைவி) தன்னை மறந்த வாலி நிலையில் இராமனின் திருமேனி அழ கில் ஈடுபட்டுப் பேசுகின்றான். ஒவியத்து எழுத வொண்ணா உருவத்தாய்' என்கின்றான். அவதார மூர்த்தியின் அழகில் சொக்கிப் போய் விடுகின்றான் வாலி' என்பதை அற்புதமாக எடுத்துக் காட்டுவார். பின்னர் தன் நிலைக்கு வந்து இராமன் 'அரசியல் பிழைத்ததைக் குத்திக் காட்டுகின்றான் குத்துசி குருசாமி மரபில் வந்தவன் போல. 'அரிசநீதி உங்கள் குலத்தில் பிறந்தவர்கள் அனைவர்க்கும் பொதுச் சொத்து அல்லவா? அப்படி இருக்க நீ இப்படி அரசநீதியையே கொன்று விட்டாய். பெண்டாட்டியைப் பிரிந்த பிறகு உன் புத்தியும் கெட்டது போலும் செய்யும் செயலில் தடுமாற்றம் உற்றாயோ?" என்று சாட்டையடி கொடுப்பதை எடுத்துக் 15. டிெ 18