பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தமிழ் அய்யா குமார வீரய்யர் 239 காட்டுவார். பெண்டாட்டியைப் பிரிந்த பின்னர் உன் புத்தி கெட்டதோ?’ என்று கிண்டல் செய்து வகுப்பைச் சிரிப்பில் ஆழ்த்துவார். ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்பட்டு வைணவ தத்துவத்தைத் தெளிவாக அறிந்த பிறகு மேற் குறிப்பிட்ட இறுதி இரண்டு அடிகளிலும் தத்துவப்பொருள் பளிச்சிடுகின்ற தைக் காணமுடிகின்றது. எம்பெருமான் இரட்சிக்கும்போது பிராட்டியின் சந்நிதி அவசியம் இருக்க வேண்டும். புருஷகாரம்' பிராட்டியின் தொழிலல்லவா? இறுதி இரண்டு அடிகளில் வாவி இராமனைச் சாடுவதுபோல் தோன்றினாலும் பிராட்டி சம்பந்தம் அற்றதனால் தனக்கு இக்கதி நேர்ந்தது என்ற தத்துவக் கருத்தையும் குறிப்பிடுகின்றான் என்று கொள்ளல் வேண்டும். ஈசுவரன் சேதநரைக் காக்குங்கால் சேதநரின் அளவற்றகுற்றங்களைக் கண்டோ, தன் சுதந்திரத் தினாலோ அவர்களைப் புறக்கணிக்கவும் கூடும்! அவ்வமயம் சேதநரிடம் கருணை பிறக்குமாறு வேண்டியதை வேண்டி யாங்குச் சொல்லி புருஷ காரம் ஈசுவரனிடம் செய்யும் பிராட்டியார் அருகிலிருக்க வேண்டும். அப்போதுதான் பகவான்தடையின்றிக் காத்தல்தொழிலை மேற்கொள்வான். கருணை வடிவாகவுடைய பிராட்டியார் அருகிலிருந்தமை யால் காகாசுரன் பிழைத்தான். பிராட்டியார் பிரிந்திருந்தத னால் இராவணன் இராமபிரானின் அம்பிற்கு இலக்காகி உயிரிழந்தான். எம்பெருமான் நம்மை ஊக்குவிக்கும் பொருட்டு இவ்வுலகில் எவ்வுருவத்துடன் தோன்று கின்றனனோ அவ்வுருவத்திற்கு ஏற்றவாறு பிராட்டியாரும் உருவம் கொண்டு தோன்றுகின்றார். இம்முறையில் பெருமாள் இராமனாய் அவதரித்தபோது இவர் சீதா பிராட்டியாகவும், அவர் கண்ணனாய் அவதரித்தபொழுது 16. புருஷகாரம்-தகவுரை