பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 நினைவுக் குமிழிகள்-1 உருக்குணிப் பிராட்டியாகவும் அவதரித்தனர். இக்கருத்து களும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கவையாகும். கூட்டொரு வரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தாதை பூட்டிய செல்வம் ஆங்கோர் தம்பிக்குக் கொடுத்துப் போந்து நாட்டொரு கருமம் செய்தாய்: எம்பிக்கு இவ்வரசை நல்கிக் காட்டொரு கருமம் செய்தாய்; கருமந்தான் இதன்மேல் உண்டோ?" (கொற்றவன் - வெற்றியை யுடையவன்; தாதை - தந்தை: பூட்டிய உரிதாகக் கொடுத்த; செல்வம் - அரசாட்சி; ஒர்தம்பி - ஒப்பற்ற தம்பி (பரதன்); போந்து . வந்து; கருமம் - செயல்) என்ற பாடலை விளக்கும் போது கிண்டலும் கேலியும்: இவர் வாக்கில் தாண்டவமாடி மாணாக்கர்களைக் களிப்பில் ஆழ்த்தும். கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ’ என்ற சொற்றொடர் அசகாய சூரன்' என்ற வடமொழிச் சொற்றொடரின் மொழி பெயர்ப்பு என்று கூறி விளக்கும் போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்து போவோம். வால்மீகியின் வடமொழி வாக்கை அருந்தமிழ் வாக்காக அவதாரம் எடுக்கச் செய்த கவிநாயகனின் மொழித் திறமையை வியந்து போற்றச் செய்த ஆசிரியரின் வித்தகத்தை எண்ணி மகிழ்வோம். இவருடைய கிண்டல்; அப்பன் கொடுத்த சொத்தைக் காப்பாற்ற வழி தெரியாமல் அதை உன் தம்பிக்கு வகை தெரியாமல்’ கொடுத்து நாட்டில் (அயோத்தியில்) ஒரு கருமம் (ஈமச்சடங்கு) செய்தாய். 17. ഞു.-81