பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தமிழ் அய்யா குமார வீரய்யர் 241 பிறகு நாட்டிலிருந்து காட்டுக்கு வந்தாய்; எம்பிக்கு இந்த வானர அரசை நல்கினாய்; இங்கும் மற்றொரு கருமம்' செய்தாய்: கிட்கிந்தையிலும் ஒரு ஈமச்சடங்கு புரிந்தாய். இனி எத்தனை கருமங்கள் செய்யப் போகிறயோ?” என்பார். இலங்கைக்குச் சென்ற பிறகு இராவணன், கும்பகருணன், அதிகாயன், இந்திரசித்து முதலிய அசுர வீரர் களையெல்லாம் கொன்று எத்தனையோ, 'கருமங்களைச்' செய்யப் போகிறாய் என்ற தொனிப் பொருள் கருமந் தான் இனிமேல் உண்டோ? என்ற தொடரில் ஒசையிடுவதை எடுத்துக்காட்டிக் கம்பன் கவிநயத்தைத் தெளிவுறுத்துவார். உறங்கிக் கிடந்த கும்பகருணன் விழித்ததும் பல அற்புதச் செயல்களை நிகழ்த்தியதுபோல, நடக்கும்போதும் உட்காரும் போதும்-ஏன் பேசும் போது கூட-உறங்குவது போன்ற தோற்றமுடைய குமார வீரய்யர் கம்பனில் ஈடுபட்டு கவிதையை விளக்கும்போது தன் உண்மையான சொரூபத் துடன் திகழ்வார். இந்தப் பண்புதான் இன்றும் அப்பெரு மகனை நினைவு கூரச் செய்கின்றது. பக்தியுடன் போற்றவும் செய்து விடுகின்றது. இதை எழுதும்போது என்னை உணர்ச்சிக் கடலில் மிதக்கச் செய்து விடுகின்றது. பிற்காலத் தில் யான் கம்பனில் அதிகமாக ஈடுபடுவதற்கும், கம்பனைப் பற்றிய கட்டுரைகள் எழுதுவதற்கும், அவை நூல்களாக வடிவம் பெறுவதற்கும் இவர் இளமையில் ஊன்றிய விதை தான் காரணமாக இருக்குமோ என்று என் இன்றைய மனம் எண்ணுகின்றது.