பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி 30 30. சின்னத் தமிழய்யா ஜம்புலிங்கக் குருக்கள் உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவத்தில் கற்பித்த ஜம்புவிங்கக் குருக்கள் இந்தக் குமிழியில் எழுகின்றார். சிறுவயதில் இளம்பிள்ளை வாதத்தால் தாக்குண்டதால் இரண்டு கால்களும் ஊனப்பட்டுச் சரியாக நடக்கமுடியாத நிலையிலிருந்தவர். இவர் முழு மேலங்கியும் விசிறி மடிப்பு மடித்த மேலாடையும் அணிந்து கொண்டு பஞ்சகச்சத்துடன் வருவதே மிகவும் எடுப்பாக இருக்கும். சற்றுக் கருநிறத் திருமேனியும், அருள் ஒழுகும் குண்டு முகமும், நெற்றியில் தீட்டியுள்ள திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் இவருக்குக் களையூட்டி நிற்கும். பெரும்பாலும் இவர் கத்திரிப்பூ நிறமேலங்கி அணிந்திருக்கும்காட்சியே நினைவுக்கு வருகின்றது. இஃது இவருக்கு மேலும் பொலிவூட்டி நிற்கும். முத்துக் கோத்தாற்போல் கரும்பலகையில் இவர் பொறிக்கும் எழுத்து கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பதாக இருக்கும். கவிதை பயிற்றலில் நிகரற்றவர்; இவரிடம் கற்றபிறகு கல்லூரிகளில் கூட இவர் கற்பித்த முறையில் நான் கவிதைப் பாடம் பயிலும் பேறு பெறவில்லை. ஆழ்ந்த உணர்ச்சியை வெளியிடுவதற்கு உரைநடை ஒலிநயம் போதுமானதன்று. அதற்குச் செய்யுள் வடிவமே மிகவும் ஏற்றது. இங்கு ஒலிநயம் (Rhythm) அளவுடன் அமை கின்றது; அழுத்தங்கள் திரும்பத் திரும்ப நிகழ்வதும் ஒழுங்குடன் அமைகின்றது. இதைத் தெளிவாக அறிந்தால் தான் கவிதையைப் பற்றி நாம் கொள்ளும் கருத்து தவறாக அமையாது. செய்யுள்-ஒலிநயம் என்பது சாதாரணக் கருத்து வெளியீட்டின்மீது மேற்கொள்ளப்பெற்ற செயற்கை முறை யன்று; இன்பமான ஓசையையோ அல்லது அழகான