பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னத் தமிழய்யா ஜம்புலிங்கக் குருக்கள் 243 முடிவையோ உண்டாக்குவதற்கு மேற்கொள்ளப் பெற்றது மன்று. அது தேவையின் பொருட்டு இயல்பாக வளர்ந்த சாதனமாகும். உணர்ச்சி மிகுந்த நிலையில் நம்முடைய மனத்தில் அசைவு ஏற்படுகின்றது. இந்நிலையில் உடலிலும் அவ்வசைவு பிரதிபலிக்கின்றது. உடலில் எப்படியாவது அவ்வசைவு புலப்பட்டே தீரும். சிறுவர்களிடத்தில் இதைத் தெளிவாகக் காணலாம். இரண்டாண்டுக்கு முன்னர்ச் சிங்கப்பூருக்குச் சென்ற தந்தை பல்வேறு விளையாட்டுப் பொருள்களுடனும் பல்வேறு தின்பண்டங்களுடனும் வந்திருக்கின்ற செய்தியைத் தொடக்கநிலைப் பள்ளிக்குச் சென்று திரும்பி வந்த சிறுவர்கட்கு அன்னை அறிவிக்கின்றாள். சிறுவர்கள் அடையும் மகிழ்ச்சியைச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் துள்ளுவர்; ஒடுவர்: ஆடுவர். பாடுவர். மனத்தின் அசைவு அவ்வாறு உடல் மூலம் வெளிப்படுகின்றது. ஒலிநயத்திற்குப் புலன்களை உள்முகமாகத் திருப்பி விடும் ஆற்றல் உண்டு. சிறந்ததோர் இன்னிசைக் கச்சேரியை கேட்டுக் கொண்டிருக்கும்பொழுது நம்முடைய கண், காது முதலான புலன்கள் வெளியுலகப் பொருள்களில் ஈடுபடாமல் அமைதி பெறுகின்றன. உணர்ச்சிகளும் உடம்பின் அளவில் நின்று விடுகின்றன. இந்நிலையில் உறங்குவது போன்ற அநுபவம்-அறிதுயில் அநுபவம்- ஏற்படுகின்றது. உறக்கத் தில் புலன்களின் இயக்கம் நின்று ஒழுங்குடன் இயங்கும் இதயத்துடிப்பு, குருதியோட்டம். மூக்கின் இயக்கம் மட்டிலும் நடைபெறுவதைப் போலவே, மனம் பாட்டின் ஒலி நயத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவ்வுறுப்புகள் மட்டிலும் இயங்கிக் கொண்டுள்ளன. நம் உள்ளம் மட்டிலும் பாட்டின் ஒலி நயத்தில் திளைக்கின்றது. உறக்கத்தில் உள்ளம் இன்பம் அடைந்து ஓர் அமைதியைப் பெறுவதைப் போலவே,