பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நினைவுக் குமிழிகள்-1 பாட்டின் சற்பனை யுலகத்திலும் உள்ளம் இன்புற்று அமைதியைக் காண்கின்றது. கோடையிலே இளைப்பாற்றி' என்ற இராமலிங்க அடிகளின் திருப்பாடலைக் கொடுமுடி சுந்தராம்பாள் அவர்கள் (இப்பொழுது அவர்கள் இல்லை) பாடும் பொழுது-அல்லது அவர்கள் பாடிய இசைத்தட்டை இயக்கிக் கேட்கும்பொழுது-நாம் இத்தகைய அநுபவத்தைப் பெறுகின்றோம். உரைநடையும் பாட்டும் கலந்த நூலொன்றினைப் படிக்கும் பொழுது நமக்கு இத்தகைய அநுபவம் ஏற்படு கின்றதன்றோ? வாய்க்குள் உரைநடையைப் படித்துக் கொண்டிருக்கும் நாம் இடையே ஒரு பாட்டு வருங்கால் அதன் உணர்ச்சி உள்ளத்திற்கு வரப்பெற்றதும் வாய் திறந்து பாட்டைப் படிக்கின்றோம். உணர்ச்சி தனக்குத் துணையாக ஒலி நயத்தை நாடுவதையே இது காட்டுகின்றது. நாட்டுப் புறங்களில் பாரதம், இராமாயணம் பக்தவிஜயம் போன்ற உரைநடை நூல்களைப் படிப்பவர்கள், அவற்றைப் பாட்டு களைப் படிப்பது போலவே நீட்டி நீட்டிப் படிப்பதை இன்றுங் காணலாம். இக்கதைகளை அவர்கள் அடிக்கடி கேட்டுப் பழகிய காரணத்தால், அக்கதைகளைப் படிக்கத் தொடங்கும் பொழுதே உணர்ச்சி நிரம்பியவர்களாகி விடுகின்றனர். உணர்ச்சிமிக்க அவர்களின் உள்ளம் கதையின் கற்பனையில் நுழைந்தவுடன் அஃது ஒலி நயத்தை நாடுகின்றது;அவர்களும் இசையோடு நீட்டிப் படிக்கின்றனர். கொல்லணையேல்' என்ற குலசேகராழ்வாரின் பாசுரத்தை உள்ளம் கனிந்து பாடுங்கால் ஆழ்வார் தாம் தசரதனாக இருந்து புலம்பும் முறையில் பாடியதைப்போலவே, நாமும் பாடித் தசரதனாகி விடுகின்றோம்; ஆழ்வார் உணர்ச்சியை நாமும் பெறு 18. திருவருட்பா-அருள் விளக்கமாலை-2 19. பெரு. திருமொழி 9 : 3