பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி ன்னத் தமிழய்யா ஜம்புலிங்கக் குருக்கள் 245 கின்றோம். செவி ஒலி நயத்தை உணரத் தொடங்கியதும் நம் உள்ளம் கற்பனையை உணர்ந்து பாட்டின் உணர்ச்சியைப் பெறத் தொடங்கி விடுகின்றது, ஒரு குழந்தையை உறங்க வைப்பதற்குத் தாய் மேற் கொள்ளும் முயற்சி ஈண்டுச் சிந்திக்கற்பாலது. பாரதிதாசனின் ஆண் குழந்தைத் தாலாட்டு', 'பெண் குழந்தைத் தாலாட்டு’, அல்லது குலசேகராழ்வாரின் மன்னுடிகழ்' என்று தொடங்கும் தாலாட்டுப் பாடல்களைப் பாடி தொட்டிலை ஆட்டும் பொழுதும் அல்லது குழந்தையைத் தன் பக்கத்தில் கிடத்திக் கொண்டு அதன் முதுகைத் தட்டும் பொழுதும் பாட்டின் ஒலிநயத்தைக் குழந்தை உணரத் தொடங்கியதும்,அல்லது தொட்டிலின் ஒழுங்கான அசைவை அறிந்தவுடன், அல்லது அன்னையின் கை தன் முதுகை மெல்லத் தட்டும் ஒழுங்கை அறிந்தவுடன் குழந்தையின் மனம் உறக்கத்தில் ஈடுபடத் தொடங்குகின்றது; சிறிது நேரத்தில் கண் வளர்கின்றது. இங்ங்ணமே, பாட்டின் ஒலி நயமும் நம்மை நனவுலகத்தை விட்டுக் கற்பனையுலகிற்குக் கொண்டு செலுத்தும் சாதனமாக அமைகின்றது. உறக்கத் திற்குரிய சாதனங்களைப் பெற்றுப் பழகிய குழந்தை நாளடைவில் உறக்கம் வரும் பொழுதெல்லாம் அவற்றை நாடும்; இங்ங்னமே பாட்டைப் படிக்கும் நம் உள்ளமும் அறிவுலகத்திலிருந்து உணர்வுலகத்தை எட்டுவதற்கு அதற்கு ஏற்றதாகிய ஒலிநயத்தை நாடும் என்பதை நம் அநுபவத் தால் அறிகின்றோம். அச்சு வடிவத்தில் காணும் பாட்டு அரை உயிரோடு தான் உள்ளது. அதைப் பாடிய கவிஞர் (கம்பர், வில்லிபுத்துாரார் போன்றவர்கள்) இப்பொழுது நம்மிடையே இல்லை. அவர்தம் பாட்டில் தம்முடைய முகக்குறிப்பையும், 20. டிெ. 8