பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 நினைவுக் குமிழிகள்-1 கையசைவுகளையும் இசையையும் விட்டுச் செல்லவில்லை: அங்ஙனம் விட்டுச் செல்லவும் இயலாது. ஆனால் ஒலிநயம், கற்பனை, மோனை, எதுகை போன்ற கூறுகளை அவற்றின் படிமங்களாக (images) விட்டுச் சென்றுள்ளார். அவருடைய உணர்ச்சியைப் பெறவேண்டுமானால் அச்சு வடிவத்தில் காணும் அவருடைய சொற்களிலிருந்து மட்டிலும் பெறுதல் இயலாது. அச்சு வடிவத்தில் கானும் அவரது பாடல்; “opefulLL G54.Lig oi" (Photographic negative) Gurrorsog, நெகட்டிவிலிருந்து படத்திலுள்ளவற்றைத் தெளிவாகக் காணல் இயலாது. படத்திலுள்ள பொருள்களின் படிமமே அதில் இருக்கும். தக்க துணைப் பொருள்களைக் கொண்டு அந்த நெகட்டிவிலிருந்து படத்தை அச்சிட்டால்தான் பொருள்களின் படம் தெளிவாகப் புலனாகும். இங்ங்னமே, கவிதையைப் பாடிய கவிஞன் விட்டுச் சென்ற படிமங்களி லிருந்து படிப்பவர் பாட்டை யாத்தவரின் உணர்ச்சியை உண்டாக்குதல் வேண்டும். அங்ங்னம் உண்டாக்குவதற்கு மேற்கொள்ளப்பெறும் முயற்சி நெறியோடு அமைந்தால் விரும்பிய பயன் கிடைக்கும். அதாவது ஒலிநயம் புலப்படுமாறு பாடலை இசையுடன் படிக்குங்கால் அது நமது உள்ளத்தைக் கவர்ந்து விடுகின்றது. இவற்றைச் சிந்திக்குங்கால் கவிதை காதுகளின் பொருட்டே தோன்றிய கலை என்பதை அறிய முடிகின்றது. செவி வாயிலாகக் கேட்டுப் பொருளை உணர்வதற்காகக் கவிஞனால் படைக்கப்பெற்ற ஓர் அற்புதச் சொல்லோவியம் இது. கண்களை நம்பிக் கவிதைகளை அநுபவிக்க இயலாது. அச்சிட்ட காகிதத்திலுள்ள சொற்கோவை கவிதையாகாது; அதனை உரக்கப் படிக்கும் பொழுதுதான் கவிதை புலனா கின்றது. இதுபற்றியே தொல்காப்பியரும் ஒசை அமைதியையே பா என்ற சொல்லால் குறித்துப் போந்தார். உரையாசிரியராகிய பேராசிரியரும், "பா என்பது, சேட்