பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னத் தமிழய்யா ஜம்புலிங்கக் குருக்கள் 247 புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஒதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற் கேதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை' என்று உரையும் வகுத்தார். எனவே, இங்ங்னம் நுண்ணிய விசும்பின் கண் அலைஅலையாய் எழும்பி ஓர் ஒழுங்காக வரும் ஓசையே பாவாகின்றது என்பது தெளிவாகின்றது. இதனை நன்கு உணர்ந்த பழந்தமிழர் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகைப்பாக்களின் ஒசைக்கு முறையே செப்பலோசை, அகவலோசை, துங்கலோசை, துள்ளலோசை எனத் தனித்தனியே பெயர் தந்து சிறப்பித் தனர். மேலும், இவை பாக்களின் வகைகளுக்கேற்ப மும் மூன்றாகப் பிரித்துணர்ந்து நுட்பமும் கண்டுள்ளனர். இந்த ஒசை நயத்தைத்தான் தொல்காப்பியர் வண்ணம்’ என்ற பெயரால் குறிப்பிடுவர். வண்ணம் என்பது ஒருபாவின் கண்ணே நிகழும் ஒசை விகற்பம்; அதாவது, சந்த வேறுபாடு, இவற்றையெல்லாம் நுட்பமாக அறிந்தவர் ஜம்புலிங்கக் குருக்கள் என்று நினைக்க இடந்தருகின்றது. காரணம், பாவின் நாடியறிந்து கற்பித்த பெருமான் இவர். ஐந்தாவது படிவத்தில் வில்லி பாரதம் கன்னபருவம் பதினேழாம் போர்ச் சருக்கத்தில் சில பாடல்கள் பாடநூலில் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்தன. இவற்றை ஜம்புலிங்கக் குருக்கள் கற்பித்த முறையை இப்போது நினைவு கூர முடிகின்றது. கன்னனுடைய புண்ணியமனைத்தையும் கண்ணன் பெற்று அவன் கேட்ட வரங்களையும் தருகின்றான். அன்றியும், "கூற்றுறழ்கராவின் வாயினின்றழைத்த குஞ்சர ராசன்முன் அன்றுதோற்றிய திருமாலின் தரிசனமும் கன்னனுக்குக் கிடைக்கின்றது. இதனைக் கன்னன் வாக்காக வில்லிபுத்துாரார், 21. தொல், பொருள் செய்யு-l (பேராசிரியம்)