பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நினைவுக் குமிழிகள்-1 நீலநெடுங் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடுநீரும் காயாவும் நிகர்க்கும் இந்தக் கோலமும்வெங் கதைவாளும் சங்கு நேமி கோதண்டம் எனும்படையும் குழைத்த வாச மாலைநறுந் துழாய்மார்புந் திரண்ட தோளும் மணிக்கழுத்தும் செவ்விதழும் வாரி சாதக் காலைமலர் எனமலர்ந்த முகமும் சோதிக் கதிர்முடியும் இம்மையிலே கண்ணுற் றேனே!" என்று கூறுவர். இங்கு வில்லியின் கன்னன் மாணாக்கர் களிடம் பேசக் காத்திருக்கின்றான். கன்னன் பெற்ற உணர்ச்சியை வில்லி பெற்றால்தானே அவன் கொண்ட உணர்ச்சியை நம்மிடம் கொட்ட முடியும்? வில்லி பெற்ற உணர்ச்சியை ஆசிரியர் பெற்றாலன்றி அவர் அவ்வுணர்ச்சியை மாணாக்கர்கட்கு எங்ங்ணம் காட்ட முடியும்? ஆசிரியர் இவ்வுணர்ச்சியை எவ்வாறு பெறுவது? ஜம்புலிங்கக்குருக்கள் தம்மைக் கன்னனாகவே எண்ணிக் கொண்டு பாடலை உணர்ச்சி ததும்ப இசையேற்றிப் படிப்பார். அவர் அங்ங்ணம் படிக்கும்போது வில்லியின் உணர்ச்சி ஆசிரியரைக் கிளர்ந் தெழச் செய்யும். அவர் வாயிலிருந்து பாடல் வெளிவரும் போது உணர்ச்சி அலை அலையாசப் பீறிட்டுக்கொண்டு எங்களை வந்தடையும். போர்க்களக் காட்சியை வில்வி மானசீகமாகக் காண்பது போலவே, எங்களையும் காணச் செய்து விடுவார் குருக்கள் அய்யா. இரண்டாம் முறை பாடலைப் படிக்கும்போது, கிரி, முகில், பவ்வநெடுநீர், நேமி, கதிர்முடி என்ற சொற்களின் பொருளை விளக்கிக் கொண்டே செல்வார். 'திருமால் மலை, மேகம், கடல் நீர், காயாமலர் என்பவற்றின் நிறத்தைக் கொண்டவர். அவர் கையில் கதை, வாள், திருவாழி, திருச் 22. வில்லிபார-கன்னபரு. பதினேழாம்போர்-247